search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pound"

    • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).

    துணிக்கடை

    இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
    • புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சரஸ்வதியிடம் இப்பகுதியில் இடம் விற்பனைக்கு உள்ளதா? என நில புரோக்கர்கள் போல் விசாரித்துள்ளனர்.

    சரஸ்வதி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர்களில் ஒருவர் சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ¼ பவுன் கம்மல் ஆகியவற்றை பறித்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அப்போதுதான் அவர்கள் நில புரோக்கர்கள் இல்லை என்பதும், புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரஸ்வதியிடம் நகையை பறித்து சென்றவர்கள் ஊத்துக்குளி கொடியம்பாளையத்தை சேர்ந்த அன்பரசன் (30), அவரது நண்பர்களான ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசை சேர்ந்த தாமரைக்கண்ணன் (41),ஈரோடு மாவட்டம் காசிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அறிவழகன் (42) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×