என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "power loom"
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன,
- நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் நேற்று கைத்தறி நெசவு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், சேலம் நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்துடன் தறி மற்றும் உபகரணங்கள் , நெசவாளர் தறி கூடம் அமைக்க ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மானியம் பெறவும், நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
- தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.
திருப்பூர்:
மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-
மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
- நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
- இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (45). இவர் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.
இவரது விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேசன் தலமையில் அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தைசாமிக்கு சொந்தமான 2 விசைத்தறிகளில் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட டாபி டிசைனுடன் கூடிய காட்டன் பெட்ஷீட் ரகத்தை உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னிமலை பகுதியில் இது போன்று பல விசைத்தறி கூடங்களில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகத்தினை உற்பத்தி செய்வதாக தொடர் புகார் வந்துள்ளது.
அதனால் இது போன்று தொடர்ந்து தீடீர் சோதனை நடத்தப்படும் என்றும், இது போன்று கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் உற்பத்தி செய்து அதை விற்பனைக்காக வாங்கி வைத்திருப்பதும் சட்டபடி குற்றம் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சேலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது சேலை உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல், ஜரிகை, பாலியஸ்டர் நூல் போன்றவை வாங்கி கூலி அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்கள் சேலை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சேலை உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலை உற்பத்தியை 15 நாட்களுக்கு நிறுத்த சேலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர், கிட்டாம்பாளையம், பதுவம்பள்ளி, தொட்டியபாளையம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சாமலாபுரம், கோம்பக்காடு, பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் சேலை தயாரிப்பு விசைத்தறி கூடங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேலை உற்பத்தியாளர் ரவி என்பவர் கூறியதாவது:-
நூல் விலை தற்போது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். நூல் விலை அதிகரிப்பதால், சேலையின் உற்பத்தி விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் நெசவு செய்யும் சேலையை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. வார்ப்பு நூல் 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
இதனால் சேலை விலை சராசரியாக ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை தினமும் ஏறுவதால் சமாளிக்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்