search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power poles"

    • பாபநாசத்தில் இருந்து சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
    • சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து வேகமாக சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.

    இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததில் சேதம் ஏற்பட்டது.

    சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளமின் பொறியாளர் ஷாஜாதி, மின்பாதை ஆக்க முகவர் ராஜகோபால் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீரமைத்தனர்.

    பின்பு மின்வாரிய ஊழியர்கள் தடைப்பட்ட மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின் இணைப்பு தரப்பட்டது.

    இது குறித்து பாபநா சம்மின்வாரிய இளமின் பொறியாளர் ஷாஜாதி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலை வாணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் ராஜேஷிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.சிகாமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண்-5 வாவிபாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் முதல் பெருமாநல்லூா் ஊத்துக்குளி சாலை வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கடந்த ஒரு மாதம் முன்பு சாலையின் ஒரு புறம் குழி தோண்டப்பட்டது. அடுத்த கட்டப் பணி எதுவும் செய்யாத நிலை இருந்தது. இதனால் சாலை குறுகலானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி பின்னா் சாலை அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • 4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    வெவ்வேறு பகுதிகளில் செல்லும் உயர அழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் 3,210 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 61 பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பங்கள், 119 பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பங்கள், 174 சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன.

    இது தவிர 200 பகுதி களில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் சரி செய்து, 23 தாழ்வான உயர் அழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட மின்கம்பங்கள், 44 தாழ்வாக உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட பின் கம்பங்கள், 250 பழுதடைந்த இழுவை கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 292 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 17 பகுதிகளில் கண்டறி யப்பட்ட பழுதடைந்த மின் புதைவடை பெட்டி சரி செய்யப்பட்டுள்ளன.

    592 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதான ஜம்பர் ஒயர் மாற்றப்பட்டுள்ளன. 140 மின் மாற்றி களில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சீரமைக்கப்பட்டன.

    மேலும் 513 மின் மாற்றி களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 128 மில் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரிபார்க்க ப்பட்டுள்ளது.

    4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன. 39 பகுதிகளில் கண்டறியப்பட்ட வெளியில் தெரியும் நிலையில் இருந்த புதைவட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×