என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "power tiller"
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்ககிரி:
சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார ஆத்ம குழு தலைவர்கள் ராஜேஷ் (சங்ககிரி), பரமசிவம் (கொங்கணாபுரம்), பச்சமுத்து (மகுடஞ்சாவடி), நல்லதம்பி (எடப்பாடி) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்கள்.
மேலும், உதவி பொறியாளர்கள் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரி ஆகியோர் அரசு திட்டங்கள், பவர் டிரில்லர்களின் பயன்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ 2 கோடியே 62 லட்சம் மதிப்பில், ரூ.1 கோடி மதிப்பிலான மானியத்தில் மொத்தம் 117 பவர் டில்லர், 4 பவர் வீடர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி ,மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணி தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.
சிகிச்சைக்காக சென்னை சென்று வருவதால் போக்குவரத்து செலவினைமேற்கொள்ள போதிய வசதி இல்லை, மேலும் முதியோர் உதவி தொகை பெற தகுதி இல்லை எனமனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவருக்கு மாதந்தோறும் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்குவதாகவும், தனது அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுமாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 2021-2022ன் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
- அதிகபட்சமாக ரூ. 85,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழ்நாடு அரசு, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், 2021-2022ன் கீழ் அண்ணா
மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. பவர் டில்லர் இயந்திரம் வாங்கும் சிறு, குறு விவசாயிகள் மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ. 85,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் நாமக்கல் பகுதி விவசாயிகள், நாமக்கல் திருச்சி ரோட்டில்,
வசந்தபுரத்தில் உள்ள வேளண்மைப் பொறியியல்
துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு, உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க லாம். திருச்செங்கோடு பகுதி விவசாயிகள், திருச்செங்கோட்டில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்