என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pragnananda"

    • விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம்.

    சென்னை:

    அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

    டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஜராத்தி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.

    செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2022) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, விளையாடாத கேப்டன் ஸ்ரீநாத் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் அங்கேரியில் இருந்து ஜெர் மனி வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர்.

    டி.குகேஷ் இன்று காலை 8.25 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனர். செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவர்களை ஊக்குவித்தனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி, பொருளாளர் ஆர்.சீனிவாசன், வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஐயப்பன் உள்பட பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    வைஷாலி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கல பதக்கம் வென்று இருந்தோம், அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஓபன் பிரிவில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் அணி, ஒரு சுற்றில் தோல்வியடைந்து, மற்ற 2 ரவுண்டுகளை வென்று ஆக வேண்டிய நேரத்தில், இரண்டு சுற்றும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரக்ஞானந்தா கூறியதாவது:-

    கடந்த முறை மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம், இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து சுற்றுகளும் கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும் தங்கப் பதக்கம் உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
    • குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.

    அதில், அதிக புள்ளிகளை பெற்று செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.90 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்

    குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையும் அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
    • குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

    இதனையடுத்து குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், செஸ் ஜாம்பவான்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா விதித் குஜராத்தி மற்றும் சாகர் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் ஜாலியாக அந்த வீடியோவில் நடனமாடுகின்றனர்.

    • பிரக்ஞானந்தா செக் குடியரசு வீரர் டாய் வென்னை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் கெய்மரை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    புதுடெல்லி:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

    பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா செய்துள்ளார். இதன்மூலம் மற்றொரு இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

    • பிரக்ஞானந்தா 6வது சுற்றிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    புதுடெல்லி:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 6வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் ஷன்லாந்த் மோதினர்.

    கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 43-வது நகர்த்தலில் டிரா செய்தார்.

    இதேபோல், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார்.

    இதையடுத்து, 6-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.

    • அரவிந்த் சிதம்பரம் 7-வது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
    • பிரக்ஞானந்தா 2வது இடத்தில் நீடிக்கிறார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 7வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யூ உடன் மோதினார்.

    வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.

    இதேபோல், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலில் ரஷியாவின் அனிஷ் கிரியுடன் மோதி வெற்றி பெற்றார்.

    இதையடுத்து,76-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா 76-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
    • கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். 


    இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×