search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister M. K. Stalin"

    • கட்சி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்
    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    பெ.சு.தி சரவணன் எம். எல் ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ரா.ராஜேந்திரன், மாரிமுத்து ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் வி.பி.அண்ணாமலை வரவேற்று பேசினார்.

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் இசை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டார். சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

    மாவட்ட எல்லையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களாக உள்ளவர்கள் பொதுமக்களிடம் சென்று, 6-வது முறையாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என எடுத்துரைக்க வேண்டும்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் களப்பணி ஆற்றிட வேண்டும்.

    கட்சி தொண்டர்கள் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வரும் தேர்தலில் வாக்களிக்க நமது கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், ஒன்றிய குழு தலைவர்கள் அய்யாக்கண்ணு, தமயந்தி ஏழுமலை, பேரூராட்சி செயலாளர் வேட்டவலம் முருகையன் கீழ்பென்னாத்தூர் அன்பு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு நன்றி கூறினார்.

    • மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
    • வேலூருக்கு நாளை வருகிறார்

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரியார், அண்ணா, கருணாநிதி வழிநின்று சமத்துவ, சமதர்ம மக்களாட்சியை, தமிழ்நாட்டை வழிநடத்தி இந்திய முதல்வர்களில் முதன்மை முதல்வராக முத்திரை பதித்து அனைத்து தரப்பு மக்களிடையே நன்மதிப்பை பெற்று இந்திய முதல்வர்களில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத சாதனையாக ஒவ்வொருநாளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தீட்டி தமிழ் நாட்டை முன்மாதிரியான மாநில மாக இந்தியாவே போற்றும் வண்ணம் தன்னலமற்ற உழைப்பை நல்கி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழக தலைவர் நாளை (புதன்கிழமை) சென்னையிலிருந்து, ரெயில் மூலமாக காட்பாடி ரெயில் நிலையத்திற்கு பகல் 11 மணிக்கு, வருகை தருகிறார்.

    அவருக்கு கழக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பை வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளைகழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், சிறப்பு அழைப் பாளர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பை வழங்கிட அனைவரும் வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×