என் மலர்
நீங்கள் தேடியது "Processor"
- உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
- TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருப்பூர்:
உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான குறை, புகார்களை உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பிரத்யேக செயலியை வடிவமைத்துள்ளது. TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, திருமணம் உள்ள விழா நாட்களில், மீதமாகும் உணவை தானம் செய்வது குறித்த தகவலை பதிவு செய்வதற்கான தளங்கள் உள்ளன.
- வேளாண் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
- நவீன தொழில் நுட்பங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் சங்கமம் - 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் விழா திருச்சி மாநகரில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 29-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு அரங்குகள், கலைநிகழ்ச்சிகள், செயல்விளக்கங்கள், கருத்தரங்குகள் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தங்களுக்கு தேவையான திட்டங்களின் மானியம் பெற உழவன் செயலி பதிவுகள் ஆகியவை விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வேளாண்மை த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, விதை மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்தறை, தமிழ்நாடு வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளான் கருவி விற்பனை நிறுவனங்கள், நுண்னி பாசன நிறுவனங்கள் சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நவீன தொழில் நுட்பங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
எனவே விவசாயிகள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த புதிய இரகங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் பெற்று, பயன்பெற வேண்டும்.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இலவச அனுமதியில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பாக தங்களது வட்டார வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பெறியியல் மற்றும் வேளாண் வணிக அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
எனவே திருச்சியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீர்காழியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இதில் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கிருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதே போல் சீர்காழி போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் காவலர் செயலி குறித்து விளக்கமளித்து காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
