search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "produce"

    • மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    • 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2 எக்டேர் பரப்பளவில் புதிய பண்ணைகுட்டை அமைக்க 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட, மீன் வளர்க்கும் பலருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளன.

    பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக, மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 6 பயனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்

    பட்டுள்ளன. மேலும், 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    • ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.

    ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும்.
    • வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒன்றிய நகரம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. குமரராஜா விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஜவகர் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முத்து செல்வன் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு விவசாய சங்க ஒன்றிய தலைவர் வேதரத்தினம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுந்தர் விவசாய சங்க நகர செயலாளர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க விவசாய சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும், வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.
    • விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை கண்டறிந்து நன்னடத்தையின் அடிப்படையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை சாலையில் பணியமடுத்தப்படு கின்றனர். அதன் அடிப்படையில் திறந்த வெளி சிறைச்சாலையில் 10 நன்னடத்தை கைதிகள் உள்ளனர்.

    கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது கரடு முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மத்திய சிறைக்கு தேவையான காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று திறந்தவெளி சிறை சாலையில் ஆய்வு மேற்கொண்டார் . இதனை தொடர்ந்து அவர் கூறும் போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் உதவி ஆய்வாளர் திருமலை தெய்வம் தலைமையில்6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் . நன்னடத்தை கைதிகளைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு உரம் எருஉரம் உள்ளிட்ட உரங்களை கொண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் முள்ளங்கி புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் நாளொன்றுக்கு 15 லிட்டர் பால் மத்திய சிறை அனுப்பப்படுகிறது . இதன் மூலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு கைதிகளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்செலவு மிச்சமாகிறது. இனிவரும் காலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    நீரா பானம் உற்பத்தி செய்ய 3 நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிமங்களை வழங்கினார்.
    சென்னை:

    தென்னை சாகுபடி பரப்பில் அகில இந்திய அளவில், தமிழ்நாடு முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிப்பதோடு, லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும், தமிழ்நாடு அரசு தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் வகையில், ‘தமிழ்நாடு நீரா விதிகள், 2017’-ஐ வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.

    நீரா பானத்தில் இருந்து நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர்.

    இதன் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    மேலும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்கும். தமிழ்நாடு அரசு குளிர்பதன அலகுகள், பிற எந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் உதவிபுரியும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, இரா.துரைக்கண்ணு, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தென்னை வளர்ச்சி வாரியத்தின் உயர் அதிகாரி டி.பால சுதாஹரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×