search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prophet Muhammad"

    • கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.
    • கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.

    10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.

        

    • சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறியதாக இர்பான் கைது செய்யப்பட்டார்.
    • முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

    சமூக ஊடகங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், இந்தாண்டு சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

    இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒவ்வொரு புதுமையும் இனிமையே என்பது அரபி பழமொழி ஆகும்.
    • புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை.

    மனிதன் புதுமைகளை அதிகம் விரும்புபவனாகவே இருக்கின்றான். அவனது மனமும் புதுமை விரும்பியாகவே மாறி வருகிறது. எங்கும் புதுமை, எதிலும் புதுமை எனும் அடுத்த கட்டத்திற்கு மனிதனின் வாழ்வு நகர்ந்து கொண்டே செல்கிறது.

    'ஒவ்வொரு புதுமையும் இனிமையே!' என்பது அரபி பழமொழி ஆகும். இதற்கேற்ப மனிதனின் தேடல்களும் புதிய கோணத்தில் நகர்ந்து செல்கிறது. மனிதன் புத்தம் புதுமைக்கு தமது மனதை நித்தமும் பறிகொடுத்து புதுமைப்பித்தனாக மாறிவிட்டான். இந்த வரிசையில் நட்பாக இருந்தாலும் புதுநட்பாக இருப்பதை தேர்வு செய்கின்றான்.

    புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை. ஆனாலும், பழைய நட்பை முறிக்கக்கூடாது; பழைய நட்பை புறந்தள்ளக் கூடாது; பழைய நட்பை 'அம்போ' என்று கை கழுவக்கூடாது; பழைய நட்பை அனாதையாக கைவிடக் கூடாது; பழைய நட்பை புறக்கணிக்கக்கூடாது.

    புது நட்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும். புது நட்புக்குக் கொடுக்கும் அதீத வரவேற்பை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும்.

    பழைய நட்புகளைப் பேணுவதும் இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்தான் ; இறைநம்பிக்கையின் ஓர் பகுதிதான்.

    ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்: 'என் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் யார்?' என்று கேட்க, 'நான் தான் ஜூஸாமா மதனிய்யா' என்று கூறினார். 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?, எங்களுக்குப் பிறகு (நாங்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?' என நபி (ஸல்) அவர்கள் வினவ, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நாங்கள் யாவரும் நலமாக உள்ளோம்' என்று கூறிவிட்டு அந்த மூதாட்டி சென்றுவிட்டார்.

    'அல்லாஹ்வின் தூதரே! அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் பக்கம் இந்தளவு கவனம் செலுத்தினீர்களே' என நான் வியப்புடன் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இந்த மூதாட்டி, கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார். பழைய நட்பு களைப் பேணுவது இறைநம்பிக்கையின் அடையாள மாகும்' என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: ஹாகிம்)

    நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி அன்னை கதீஜா (ரலி) மரணித்த பிறகும், மனைவியின் நட்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் நலமாகவும், நளினமாகவும், நட்பாகவும் நடந்து கொண்டார்கள்.

    பழைய நட்புகளை பேணுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே. ஒருவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் நட்பாளர்களிடம் நாம் நமது நட்பை கைவிடக்கூடாது. பழைய நட்பையும் பசுமை மாறாமல் பாதுகாத்திட வேண்டும்.

    'அபூ உஸைத் மாலிக் பின் ரபீஆ ஸாதி (ரலி) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனூஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, எனது பெற்றோரின் மரணத்திற்குப் பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?' என்று கேட்டார்.

    'ஆம் அவர்களுக்காக பிரார்த்திப்பது, அவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துவது ஆகியவை பெற்றோருடன் அழகிய முறையில் நடப்பதாகும்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

    காலம் சென்ற வயதான பெற்றோரின் உறவினர்களும், அவர்களின் நண்பர்களும் வயதில் மூத்த பழைய காலத்தைச் சார்ந்த பழைய ஆட்களாக இருப்பார்கள். பெற்றோர் பேணிய பழைய உறவுகளையும், பழைய நட்புகளையும் அவர்களுக்குப் பின் நாம்தான் பசுமை மாறாமல் பேணி நடக்கவேண்டும்.

    'ஆயிஷா (ரலி) கூறுவதாவது: கதீஜா (ரலி) மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வேறெவரின் மீதும் நான் ரோஷம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை மணப்பதற்கு மூன்றாண்டு களுக்கு முன்பே கதீஜா (ரலி) இறந்து விட்டார்.

    இன்றும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளிடையே அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்'. (நூல்: புகாரி)

    பழைய நட்புகளை பேணி நடப்பதும் இறை வணக்கம் தான், இறை நம்பிக்கையும்தான். எனவே நட்புகளை பேணுவோம். நலம் பெறுவோம்.

    • சிவகங்கை அருகே முகமது நபி குறித்து அவதூறாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழ சீவல்பட்டியை சேர்ந்தவர் சரவணன். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர் ஆதவப்பிரியன் என்ற பெயரில் உள்ள தனது முகநூலில் முகமது நபி குறித்து அவதூறான கேலிச்சித்திரங்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சரவணன்

    இதை கண்டித்தும், முகமது நபியை அவதூறு செய்த சரவணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    இறைத்தூதர் நபிகள் நாயகம் அவதூறாக பேசிய பா.ஜ.க கும்பலை கைது செய்யாத மோடி அரசு பதவி விலக கோரி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குடந்தை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு, வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய

    ஆர்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, நீலப் புலிகள் இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும், ஜமாஅத்துல் உலமா சபையின் வட்டார நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, மதிமுக

    மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், மேயர் சரவணன் துணைமேயர் தமிழழகன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், மற்றும்

    ஜமாத்தார்களும், பெண்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ×