search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Distribution Scheme"

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
    • இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை அல்லது நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல் மேற்கொள்ளலாம்.

    குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர்கள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு அல்லது இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும். இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 93424 71314-க்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.
    • பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்திலும், தாராபுரம் தாலுகாவில் சூரியநல்லூர் கிராமத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் துங்காவி கிராமத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்திலும், உடுமலை தாலுகாவில் கணபதிபாளையம் கிராமத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம் பாளையம் கிராமத்திலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் சேனாபதி பாளையம் கிராமத்துக்கு வேலப்ப நாயக்கன் வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து குடிமை பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.
    • லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

    திருவாரூர்;

    திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.

    இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

    அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதைத்ெதாடர்ந்து சேலத்துக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.
    • வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.

    அதன்படி, கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமத்திலும், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்) கிராமத்திலும், திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பொது விநியோக திட்டம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
    • முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி ஈரோடு வட்டத்திற்கு கரட்டுப்பாளையம் ரேஷன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெறுகிறது. பெருந்துறை வட்டத்திற்கு கருமாண்டி செல்லிபாளையம்-௧ ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    மொடக்குறிச்சி வட்டத்திற்கு ஆயி கவுண்டன் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடை பெறுகிறது. கொடுமுடி வட்டத்திற்கு காரவலசு ரேஷன் கடையில் ஈரோடு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலை மையில் நடைபெறுகிறது.

    கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு ஆலங்கா ட்டுப்புதூர் ேரஷன் கடையில் கோபி செட்டிபாளையம் வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    நம்பியூர் வட்டத்திற்கு குருமந்தூர் ரேஷன் கடையில் கோபி செட்டிபாளையம், வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது. பவானி வட்டத்திற்கு மாணிக்கம் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

    அந்தியூர் வட்டத்திற்கு முகாசிபுதூர் ரேஷன் கடையில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. சத்தியமங்கலம் வட்டத்திற்கு கூத்தம்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

    தாளவாடி வட்டத்திற்கு இக்கலூர் ரேஷன் கடையில் கோபிசெட்டிபாளையம் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் வஞ்சிப்பாளையம் கிராமம், தாராபுரம் தாலுகாவில் கொக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் இடுவாய் கிராமம், உடுமலை தாலுகாவில் ஆமந்தக்கடவு கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமம் ஆகியவற்றுக்கு அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் மங்கலப்பட்டி கிராமத்துக்கு முத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் மைவாடி கிராமத்துக்கு நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் கோடங்கிப்பாளையம் கிராமத்துக்கு காரணம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது.

    அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், நகல் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோக திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    • திருவாரூரில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற உள்ளது.
    • இதில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா தீபங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா வேலங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா கூந்தலூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா புலவர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடக்கிறது.

    மேலும் நீடாமங்கலம் தாலுகா பத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைபதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி நல்லூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பழையங்குடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பாலகுறிச்சி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதந்தோறும் 2-ம் சனிக்கிழமையன்று உணவுப்பொருள் வழங்கல் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது
    • மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும்.

    தேனி:

    பொது வினியோக திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளை களைவதற்காக மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய 2ம் சனிக்கிழமையன்று உணவுப்பொருள் வழங்கல் குறை ேகட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் நாளை இந்த கூட்டம் 5 தாலுகாக்களில் நடைபெறுகிறது.

    பெரியகுளம் தாலுகாவில் ஜல்லிப்பட்டி ரேசன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து தலைமையிலும் தேனி தாலுகாவில் வீரபாண்டி ரேசன் கடையில் தனித்துணை ஆட்சியர் சாந்தி தலைமையிலும்,

    ஆண்டிப்பட்டி தாலுகா பிச்சம்பட்டி ரேசன் கடையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ் தலைமையிலும் உத்தமபாளையம் தாலுகாவில் ரெங்கநாதபுரம் ரேசன் கடையில் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமையிலும்

    போடி தாலுகா பூதிப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி தலைமையிலும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பொது வினியோகம் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு செய்யலாம். மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • பாளை தாலுகா அலுவலகத்தில் சிலர் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் மனுக்கள் வழங்கினர்.

    நெல்லை:

    பொதுவினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த மாதமும் 2-வது சனிக்கிழமையான இன்று நடந்த குறைதீர்க்கும் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வற்றுக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

    டவுனில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டையில் செல்போன் எண்ணை புதிதாக இணைக்கவும், பழைய எண்ணை மாற்றவும் பொதுமக்கள் வந்திருந்தனர். பாளை தாலுகா அலுவலகத்தில் சிலர் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் மனுக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட அலுவலகங்களிலும் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து சென்றனர்.

    ×