search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு நாள் கூட்டம்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு நாள் கூட்டம்

    • மாதந்தோறும் 2-ம் சனிக்கிழமையன்று உணவுப்பொருள் வழங்கல் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது
    • மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும்.

    தேனி:

    பொது வினியோக திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளை களைவதற்காக மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய 2ம் சனிக்கிழமையன்று உணவுப்பொருள் வழங்கல் குறை ேகட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் நாளை இந்த கூட்டம் 5 தாலுகாக்களில் நடைபெறுகிறது.

    பெரியகுளம் தாலுகாவில் ஜல்லிப்பட்டி ரேசன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து தலைமையிலும் தேனி தாலுகாவில் வீரபாண்டி ரேசன் கடையில் தனித்துணை ஆட்சியர் சாந்தி தலைமையிலும்,

    ஆண்டிப்பட்டி தாலுகா பிச்சம்பட்டி ரேசன் கடையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ் தலைமையிலும் உத்தமபாளையம் தாலுகாவில் ரெங்கநாதபுரம் ரேசன் கடையில் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமையிலும்

    போடி தாலுகா பூதிப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி தலைமையிலும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பொது வினியோகம் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு செய்யலாம். மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×