search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puddles"

    • பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் 1997 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கதிறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்கு திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது முதல்கட்டமாக 2021-22ஆம் ஆண்டு 73 கிராம பஞ்சாயத்துக்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் மாபெரும் திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறியபட்டு அதில் உள்ள முட்புதர்களை அகற்றி, திருத்தம் செய்து வேளாண் பொறியியல் துறையுடன் ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அது மட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று தென்னை மரக்கன்றுகள் வீதம் ஒரு கிராமத்திற்கு 200 பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    வரப்பு பயிரை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்களில் ஒரு எக்டருக்கு 5 கிலோ உளுந்து விதைகள் மானியத்தில் கொடுக்கப்பட்டு ஒரு கிராமத்திற்கு 15 எக்டர் வீதம் வரப்பு பயிர்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஒரு கிராமத்திற்கு ஐந்து வீதம் கொடுக்கப்பட்டு மொத்தம் 730 தெளிப்பான்கள் 50 சதவீதத்தில் மானியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தோட்டக்கலை துறையினரால் வீட்டு தோட்டம் அமைவதற்கான நெகிழி க்கூடைகள் பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வரப்பு ஓரங்களில் பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறுகள், பண்ணை குட்டைகள், தூர்வாருதல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கால்நடைகளின் நலம் காத்து பால் உற்பத்தினை பெறுகிற கால்நடை துறையின் மூலம் கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய பால் சொசைட்டிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கூடுதலாக 80 சதவீத இதர திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    ஒரு கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டமானது சிறப்பாக வடிவமைக்கபட்டு செயல்படுத்தபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டாரம் தோப்புவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரதாபாஸ் கூறும்போது ;-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் திட்டத்தின் கீழ் தரிசு தொகுப்பு குழு 22 ஏக்கர் தரிசு உள்ளது.

    நீர் அளவாரம் இல்லாததால் நீண்ட நாள் தரிசாக இருந்த நிலையில் தரிசு தொகுப்பு குழு அரசு திட்டத்திற்கு தேர்வு செய்த அரசு ஒதுக்கி ஆழ்துளை அமைப்பதற்கு விவசாயி 1 சென்ட் நிலம் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்ததினால் தோப்பு விடுதி தரிசுதொகுப்பு குழுவுக்கு அலுவலர் கிணறு 620 அடி அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதனால் நீண்ட நாள் பரிசாக கிடந்த இடத்தை விவசாய நிலமாக கொண்டு வர முடியும்.

    இந்த திட்டத்தை அறிமுகம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    அவிநாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில் 32 பொதுப்பணித்துறை குளம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 42 குளங்கள், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 971 குட்டைகள் என 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    மொத்தமுள்ள 1,045 குளம் குட்டைகளில் 947 குளம், குட்டைகளில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு விட்டது.இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடியே குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும். திட்டப்பணி 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீர் செறிவூட்டப்பட வேண்டிய குளம், குட்டைகளை தூர்வாருவதுடன் அதில் செறிவூட்டப்படும் தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக்குழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது:-அத்திக்கடவு நீர் செறிவூட்டப்பட உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், வெயில் காலங்களில் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் அக்குளம், குட்டைகளை தூர்வாரி தேங்கும் நீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சு குழிகளை அமைக்க வேண்டும்.அந்தந்த கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொண்டால், செறிவூட்டப்படும் தண்ணீர் நிலத்தடியை சென்றடையும்.குறைந்தபட்சம் பொதுப்பணித்துறை குளங்களிலாவது இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.
    • காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசாணை பெற முடியும் என்பதால் சிறப்பு மேலாண்மை கூட்டம் ஒருங்கிணைத்து நடத்தப்ப ட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, மோகூர், விக்ரமம், வாட்டாகுடி, மூத்தாகுறிச்சி, புளியக்குடி, காரப்பங்காடு, மதுரபாஷனிபுரம், அத்திவெட்டி மற்றும் கல்யாண ஓடை பஞ்சாயத்து களில் இவ்வருடம் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து கிராம வளர்ச்சி க்கும் விவசாயிகள் தன்னிறைவு அடைவதற்கும் தேர்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து சிறப்பு மேலாண்மை கூட்டம் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன்ராஜு மற்றும் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களின் கலந்து ரையாடலுடன் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறிய தடுப்பணைகள், சிறிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், நீர் அமிழ்வு குட்டைகள், மண் வரப்புகள் அமைத்தல், சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணிகள், சமூக நாற்றங்கள் அமைத்தல், சாலையோரத்தில் மரங்கள் நடுதல், பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.

    வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ், தினேஷ், முருகேஷ், பூமிநாதன், ஜெரால்டு மற்றும் கார்த்திக் ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திரு ந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் ராஜூ ஐயாமணி, மேலாண்மை கூட்ட உறுப்பின ர்களை பதிவு செய்தனர். பஞ்சாயத்து செயலாளர்கள் அறிக்கை தயார் செய்து வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்க ளிடம் வழ ங்கினர். காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசா ணை பெற முடியும் என்ப தால் சிறப்பு மேலாண்மை கூட்டம் இன்றைய தினம் ஒருங்கி ணைத்து நடத்தப்ப ட்டது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்கு னர் திலகவதி அனைவ ருக்கும் நன்றி கூறினார்.பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ×