என் மலர்
நீங்கள் தேடியது "Pujara"
- டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் எடுத்துள்ள புஜாரா பிராட்மேனை முந்தினார்.
- புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்தார்.
மிர்பூர்:
இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவரில் 227 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 10 ரன்னில் அவுட்டானார். ஷுப்மான் கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். புஜாரா 24 ரன், விராட் கோலி 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஆடிய ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 2-ம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
வங்காள தேசம் சார்பில் தஜிஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், புஜாரா நேற்று 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.
பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.
- இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா.
- இவர் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார்.
ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடி உள்ளனர்.
புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார்.
அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார். *புஜாரா 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்டில் 4 மற்றும் 72 ரன்கள் வீதம் எடுத்தார். 2017-ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்கள் குவித்தார். ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் இவர் தான்.
100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
- 100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை.
- கபா டெஸ்டில் அடிவாங்கி அரைசதம் அடித்தது மறக்க முடியாத தருணம் என புஜாரா கூறினார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டி இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகிய இந்தியர்கள் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடியுள்ளார்.
இந்த சிறப்பை நினைவுகூறும் வகையில் புஜாராவுக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.
100-வது டெஸ்ட் போட்டியில் எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. முதல் இந்தியராக சதம் அடிக்க பிராத்திருக்கிறேன் என கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புஜாராவிற்கு புஜாராவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோஹன் ஜெட்லி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்திய அணியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பரிசுக்கு வாங்கியதற்கு பிறகு புஜாரா பேசியதாவது:-
ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்களின் பலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக எனது ஆட்டத்தில் சில ஷாட்களைச் சேர்த்துள்ளேன், மேலும் கிரிக்கெட் வீரராக தொடர்ந்து வளர்ந்து வருகிறேன்.
நான் அறிமுகமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை எடுத்திருந்தேன். ஒருவேளை அந்த 72 ரன்கள் நான் எடுக்காமல் இருந்திருந்தால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். 2024ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அடித்தேன். துணைக் கண்டத்திற்கு வெளியே நான் அடித்த முதல் சதம். அது என் வாழ்வில் மறக்க முடியாது.
அதேபோல், 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சின்னசாமியில் 92 ரன்களும், 2018-19 தொடரில் அடிலெய்டில் 123 ரன்களும், கபா டெஸ்டில் நான் உடலில் அடிவாங்கி சேர்த்த 56 ரன்களும் என்னால் என்றுமே மறக்க முடியாத தருணங்கள் என்றார்.
புஜாரா இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 57-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 25-ல் தோல்வியும், 17-ல் டிராவும் கண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,900 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 27 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,778 ரன்களும் எடுத்துள்ளார்.
டெஸ்டில் செஞ்சுரி அடிக்க உள்ள புஜாரா இதுவரை ஒரு முறை கூட கேப்டன் பதவியை அலங்கரித்ததில்லை.
2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
- இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 100-வது டெஸ்ட்டில் டக் அவுட் ஆன 2-வது இந்திய வீரர் என்ற புஜாரா ஆவார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடி வருகிறது.
இந்த போட்டி புஜாராவுக்கு 100-வது போட்டியாகும். இந்திய அணி 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அப்போது களமிறங்கிய புஜாரா 100-வது போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில், எல்பிடபள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் மோசமான பட்டியலில் புஜாரா இணைந்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன, இரண்டாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய அணிக்காக விளையாடிய மற்றொரு வீரரான திலீப் வெங்சர்கார், கடந்த 1988-ம் ஆண்டு அவர் பங்கேற்ற தனது 100-வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆனார். அதோடு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவானான ஆலன் பார்டர்,மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கோர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டெர் குக் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் ஆகியோரும், தங்களது 100வது போட்டியில் டக்-அவுட் ஆகியுள்ளனர்.
மேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, வீரேந்திர சேவாக், முகமது அசாருதின் ஆகியோருக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஜாரா இருக்கிறார்
- ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன்.
- புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.
இந்தூர்:
இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா ஒருவர் மட்டுமே லயன் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 142 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன் எடுத்தார்.
இந்த நிலையில் இளம் வீரர்கள் புஜராவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று லயன் கூறியுள்ளார். போட்டிமுடிந்த பிறகு இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-
டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு அணியை கட்டமைக்க நீண்ட ஓய்வு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி திறமையானது. அவர்களுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆடுவது சவாலானது. நான் நம்பிக்கையுடன் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தேன். ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன். புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.
இக்கட்டான நேரத்திலும் எப்படி விளையாடுவது என்பதை இளம் வீரர்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு லயன் கூறி உள்ளார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள்.
- அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன்களில் புஜராவும், பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களுக்காக புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்?
அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் விசுவாசம் உள்ள அமைதியான சேவகர். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? மற்றவர்கள் அணியில் இருக்கும் போது புஜரா மட்டும் நீக்கப்பட்டது ஏன்?
தேர்வுக்குழு என்ன அளவுகோல் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
- தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சமாளித்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையயடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரோகித், "நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருப்போம். இந்திய அணியில் இல்லாவிட்டாலும் நாங்கள் கண்டிப்பாக சந்திப்போம். ரஹானே மும்பையில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்ப்பேன். புஜாரா ராஜ்கோட்டில் உள்ளதால் அவரை அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே புஜாராவும் ரஹானேவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை ரோகித் உணர்ந்தார்.
பின்னர் பேசிய அவர், "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை. நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள். புஜாராவும் ஓய்வு பெறவில்லை. உங்களின் கேள்வியால் தான் இப்படி பதில் கூறி விட்டேன்.
இந்த நேரத்தில், மூவரும் இந்திய அணியில் இல்லை, ஆனால் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணிக்கு திரும்பி வரக்கூடும். அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
- இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில், படுதோல்வியை சந்தித்தது ரசிகர்கள் கோபத்தை அதிகப்படுத்தியது.
இந்திய அணி தோல்வியை அடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த தொடரோடு ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறுவார்கள் என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் விளையாட இந்திய அணியில் சத்தேஸ்வர் புஜாரா இடம்பெற வேண்டும் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், கம்பீரின் கோரிக்கையை தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வீரர் புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் 11 போட்டிகளில் 993 ரன்களை விளாசியுள்ளார். இவர் நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாடி இருந்தால், நிச்சயம் குறிப்பிடத்தக்க பலன்களை அணிக்கு ஏற்படுத்தி இருப்பார். 36 வயதான புஜாரா தற்போது கமென்ட்ரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே புஜாரா விளையாடியுள்ளார்.
- ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் புஜாரா. 34 வயதானது இவர் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு பொறுமையாக விளையாடக்கூடிய வீரர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். 79 பந்தில் 107 ரன்கள் குவித்துள்ளார். அந்த போட்டியின் 45-வது ஓவரில் 22 ரன்களை குவித்துள்ளார். 50 ரன்களை எடுத்த பிறகு 100 ரன்களை 22 பந்தில் அடித்துள்ளார். ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Cheteshwar Pujara smashed 22 runs in an over - 4,2,4,2,6,4.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2022
pic.twitter.com/HhgGlw7c0z
டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் கூட இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. என்னால் அதிரடியாக விளையாட முடியும், என்னை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் பிரிமீயர் லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த லீக்கில் ஜலாவாத் ராயல்ஸ் அணி பங்கேற்கிறது. இந்த அணி புஜாராவை எடுத்துள்ளது. இதன்மூலம் டி20 லீக்கில் புஜாரா தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்.
ரஞ்சி டிராபியில் 19 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 268, 148, 69, 91 என அசத்தியுள்ளார்.
புஜாராவை போல் 500 ரன்களுக்கு மேல் குவிக்கலாம், ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்துகளை சந்திப்பது எளிதான காரியம் அல்ல. அது இளைஞர்களுக்கான அளவுகோல் என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
புஜாரா குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களால் மட்டுமே நாள் முழுவதும் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய இயலும். ஒரே தொடரில் புஜாரா 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். இது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. பேட்ஸ்மேன்களால் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிக அளவிலான பந்துகளை சந்தித்தது இளம் வீரர்களுக்கான அளவுகோல்.
களத்தில் நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது சிறப்பானது. அவரது பேட்டிங் விரும்பு பார்ப்பேன். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்’’ என்றார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 7 இன்னிங்சில் 350 ரன்கள் குவித்தார். சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பந்த் தலா இரண்டு சதம், அரைசதங்களுடன் 696 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.71 ஆகும்.
ஆஸ்திரேலியா தொடரில் 350 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னிலை வகித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்குமுன் டோனி 19-வது இடத்தை பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறப்பான தரவரிசையாக இருந்தது.
அத்துடன் 673 புள்ளிகள் பெற்று ரிஷப் பந்த் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன் டோனி 662 புள்ளிகளும், பரூக் இன்ஜினீயர் 619 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.
ஆஸ்திரேலியா தொடர் தொடங்குதவற்கு முன் 59-வது இடத்தில் இருந்தார். 20 கேட்ச்கள் பிடித்ததுடன், 350 ரன்களும் குவித்ததன் மூலம் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மூன்று சதங்களுடன் 521 ரன்கள் குவித்த புஜாரா 4-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.