search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliyangudi"

    • பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • புற்றுக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆவணி மாத பவுர்ணமி பூஜை நடை பெற்றது.

    பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பவுர்ணமி நாளில் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டி வழிபாடு

    மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆவணி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழி வாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபி ஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிர மணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    108 திருவிளக்கு பூஜை

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப் பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.
    • பூஜையில் மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    சிறப்பு பாலாபிஷேகம்

    தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிமாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 18 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    திடீர் சாவு

    தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர்.

    இதற்கிடையே இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள், பூக்கள் வழங்கி வரவேற்றார்.
    • மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்ப பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள். பூக்கள் வழங்கி வரவேற்றார்.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்சிக்கு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை கைலாசம் வரவேற்றார். ஆசிரியை நீலாம்பிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

    அதனை தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும் நகர்மன்றத் தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் ரூ. 1000 பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் பாத்திமா, 9-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன், ஆசிரியர்கள் முகம்மது, கண்ணன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியை கள், அலுவலர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வ லர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புளியங்குடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
    புளியங்குடி:

    புளியங்குடி கால்நடை மருத்துவமனையில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆதரவற்ற பெண்கள் ஒருவருக்கு 5 ஆடுகள் வீதம் 100 பேருக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்சிக்கு சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் விஜயாசவுந்திர பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி திட்ட விளக்க உரையாற்றினார். 

    சிந்தாமணி கால்நடை மருத்துவர் கருப்பையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டு 100 பெண் பயனாளி களுக்கு ஆடுகளை வழங்கி னார். 

    இதில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரக்மான், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் எராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    • புளியங்குடி பஸ் நிலையம் மற்றும் காமராஜர் சிலை அருகே நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவி விஜயா சவுந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர், தொண்டர் அணி சார்பில் புளியங்குடி பஸ் நிலையம் மற்றும் காமராஜர் சிலை அருகே நீர் -மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதனை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா சவுந்தர பாண்டியன், துணைத் தலைவர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல்ஹமீது, நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், பொன்னுதுரைச்சி, உமாமகேஷ்வரி, ரெஜிகலா, வக்கீல் பிச்சையா, குகன் முத்துக்குமார், சேதுராமன், குழந்தை ராஜ், மாரி செல்வம், வெங்கடேஷன், மீனாட்சி சுந்தரம், ராஜாவேல்பாண்டியன் உட்பட எராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு வருசாபி ஷேகத்தை முன்னிட்டு 504 பால்குடம் தமிழ்நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் எடுக்கப்பட்டு விநாயகர் கோவிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தது.

    அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமானம் கோபுர கலசங்கள் மீது இலஞ்சி ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் 21 வகையான நறுமணப் பொருட்கள் உள்பட பாலாபி ஷேகமும், தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்று காளி, நாகக்காளி, ரத்தக்காளி, சூலக்காளி, பதினெட்டாம்படி கருப்ப சாமி, செங்காளி யம்மன், மகாகாளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    அம்மனுக்கும், புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபா ராதனை காண்பிக்கப்ட்டது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையில் காலை 9 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திரவியாகுதி, பூர்ணா குதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரனம், ராபர்பனம், ரக்சா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு இரவு 8 மணிக்கு எந்திர ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 40 பெண் குழந்தைகளுக்கு நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது சொந்த செலவில் முதல் தவணையை செலுத்தினர்.

    புளியங்குடி:

    புளியங்குடி தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புளியங்குடி அஞ்சலகத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கான கணக்கு தொடங்கும் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலை குமார், புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் அந்தோணிசாமி, காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பம்சத்தை புதிதாக கணக்கு தொடங்கிய பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார். புதிதாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த 40 பெண் குழந்தைகளுக்கு நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது சொந்த செலவில் முதல் தவணையை செலுத்தினர். ஏற்பாட்டினை புளியங்குடி துணை அஞ்சலக அதிகாரி ஸ்டெல்லாமேரி மற்றும் அஞ்சலக அதிகாரிகள் செய்திருந்தனர். இதில் அஞ்சல் துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புளியங்குடி:

    புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புளியங்குடியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த அறநிலையத் துறையை வலியுறுத்தியும், 25-வது வார்டில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டியும், 31-வது வார்டு தெருவில் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை ஒரமாக வைக்க வேண்டும் எனவும் பலதடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகர தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், நகர பொது செயலாளர் மாரியப்பன் மாரீஸ், நகர பொருளாளர் அருணாசலம், நகர் மன்ற உறுப்பினர் திருமலை செல்வி, நகர துணை தலைவர் நீராதிலிங்கம் திருமலைகுமார், அஸ்வதி மாரியப்பன்,மாவட்ட மகளிரணி தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன், நகர மகளிரணி தலைவர் பொன்சரோஜினி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி பகுதியில் டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மருந்து கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து சுமார் ரூ. 33 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.
    • தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சூரியகாந்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மற்றும் டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மருந்து கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து சுமார் ரூ. 33 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.

    இந்த சம்பவம் குறித்து புளியங்குடி காவர் துறையி னர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் கடையின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சிந்தாமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத் திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பழைய குற்றவாளி சூரியகாந்தி என்பதும், மருந்து கடையில் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புளியங்குடி பகுதியில் உள்ள கோவில்களில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிய சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும், அதேபோன்று கடந்த வருடம் டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்த தபால் நிலைய ஊழியர் வீட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிவந்தது.

    சூரியகாந்தியை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்றச் சம்பவங் களில் ஈடுபட்ட சூரியகாந்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சூரியகாந்தி மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    • வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து வந்தனர்.
    • 2 பேரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    காட்டுப்பன்றி வேட்டை

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா, வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன் ஆசிர்வாதம் ஆகி யோர் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிந்தா மணியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (26) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரூ. 50 ஆயிரம் அபராதம்

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருவதை ஒட்டிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    நகர அவைதலைவர் வேல்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்குகிறார். நலத்திட்ட உதவிகள் முடிந்தவுடன் புளியங்குடி வழியாக செல்லும் அவருக்கு 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலாவதாக நமது மாவட்டத்தின் தொடக்க எல்லையில் நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகிலும், அடுத்து புளியங்குடி பஸ் நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், 3-வதாக சிந்தாமணியில் நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×