என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
- புளியங்குடி பகுதியில் டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மருந்து கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து சுமார் ரூ. 33 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.
- தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சூரியகாந்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
புளியங்குடி:
புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மற்றும் டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மருந்து கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து சுமார் ரூ. 33 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்து புளியங்குடி காவர் துறையி னர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் கடையின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சிந்தாமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத் திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பழைய குற்றவாளி சூரியகாந்தி என்பதும், மருந்து கடையில் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புளியங்குடி பகுதியில் உள்ள கோவில்களில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிய சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும், அதேபோன்று கடந்த வருடம் டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்த தபால் நிலைய ஊழியர் வீட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிவந்தது.
சூரியகாந்தியை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்றச் சம்பவங் களில் ஈடுபட்ட சூரியகாந்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சூரியகாந்தி மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்