search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pulses"

    • எண்ணெய் இறக்குமதிக்கான வரி 25 சதவீதம் உயர்வு.
    • லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது.

    சென்னை:

    எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.


    பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர்.

    மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.


    கடலை பருப்பு

    இதே போல கடலை பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆக கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
    • சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள லாம் என தமிழக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர்.
    • வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டா ரத்திற்கு உட்பட்ட பெரிய

    சோளிபாளையம் கிரா மத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூ ரியில் பயிலும் 4-ம் ஆண்டு வேளாண் மாணவர்களால் வரப்பு பயிர் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர். பின்னர் உதவி வேளாண்மை இயக்குனரிடத்தில் விவசா யிகள் மத்தியில் வரப்பு பயிர் குறித்த விழிப்புணர்வு பற்றியும் கேட்டறிந்தனர்.

    • 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
    • ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்கரனுக்கு ரூ.7,600 அபராதம் விதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பாபநாசம் தாலுகாவில் கூட்டுறவு அங்காடிகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஏர்வாடி கூட்டுறவு அங்காடியில் அங்கீகார சான்று இல்லாமல் 42 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாலகிருஷ்ணனுக்கு ரூ.11, 250 அபதாரம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்பத்துவேலி அங்காடியில் 53 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து 200 கிலோ அரிசி, 13 கிலோ சர்க்கரை அங்கீகார சான்று இல்லாமல் எடுத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்க ரனுக்கு ரூ.7,600 அபதாரம் விதிக்கப்பட்டது. இரண்டு விற்பனையாளர்கள் மீதும் துறையின் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கபிலன் உடன் இருந்தார். மேலும் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், வழுத்தூர் கூட்டுறவு அங்காடியில் சோதனை ஈடுபட்டபோது அரிசி 100 கிலோ கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் குமாருக்கு ரூ.2,500 அபதாரம் விதிக்கப்பட்டது.

    போடி வட்டார பகுதியில் பயறு வகைகள் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி, தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மானாவாரி நிலங்கள் உள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததால் இதனை வைத்து மானாவாரியாக மிளகாய், வெங்காயம், தட்டைப்பயிறு, பீன்ஸ் போன்றவை சாகுபடி செய்தனர்.

    தற்போது இவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நல்ல விலை கிடைக்கும் என்றும் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்கிறார்கள். ஆனால் அதனை விற்பனை செய்யும் போது விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், உரம், மருந்து, வேலை ஆட்களுக்கு வழங்கப்படும் கூலிக்கு கூட லாபம் இல்லை. எனவே அரசு இவைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #KeralaFlood #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. மத்திய அரசு, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கேரளாவில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இப்பொருட்களை வினியோகம் செய்ய கேரள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். இவை முதல் கட்ட உதவிதான். தேவைப்பட்டால், இன்னும் உதவ தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KeralaFlood #RamVilasPaswan 
    ×