என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthiya tamizhagam party"

    • வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
    • புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.

    வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.

    தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

    புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது.
    • வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் எல்லை பறவை சுதன் தலைமையில் தென்திருப்பேரையில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் கேசவன் (கிழக்கு), ஆழ்வை செல்வகுமார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி செய லாளர் தேன்மான்குளம் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை பெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாய தொழிலை பாதுகாத்திடும் வகையிலும், எளிய விவசாயிகளின் நலன் காத்திடும் வகையிலும் வேளாண்மை துறை அதிகாரிகள் செயல்பட வலியுறுத்துகிறது. கடம்பாகுளம் மற்றும் தென்கரை குளங்களின் கரைகளை பலப்படுத்தி மடைகளை மராமத்து செய்து பாதுகாத்திட பொதுப்பணித்துறையை வலியுறுத்துகிறது.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு முதல் கொற்கை வரை ஜீவநதியான தாமிரபரணி நதியை இயற்கை வளப்பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் புளியங்குளம் பரியன், சேகர், ஸ்ரீீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமராஜன், ஆழ்வை பேரூர் கழக செயலாளர் பிரபாகரன், ஆத்தூர் மாரீஸ் மள்ளர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இராஜபதி ஜெயராமன், குருகாட்டூர் கிளை செயலாளர் ஞானபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்திருப்பேரை நகர செயலாளர் துர்க்கை யாண்டி நன்றி கூறினார்.

    ×