என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pv sindhu"

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    நிங்போ:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்று கணக்கில் வென்றனர். யார் வெற்றியாளர் என்ற கடைசி சுற்றில் பிவி சிந்து தோல்வியடைந்தார். இதனால் அகானே யமகுச்சி 21-11, 16-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது.
    • 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் சிந்து தோல்வியடைந்தார்.

    பாசெல்

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 49-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ். பிரனாயை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-5, 21-16 என்ற நேர் செட்டில் டென்மார்கின் ஜோகன்சனை பந்தாடி அடுத்த சுற்றை எட்டினார்.

    பெண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 17-வது இடம் வகிக்கும் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து 17-21, 19-21 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் (டென்மார்க்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
    • நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் வென்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பி.வி.சிந்து சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி உள்ளார்.
    • அடுத்த ஒலிம்பிக் வரை அவருடன் இருக்க முடியாது என்பது வருத்தம் என பயிற்சியாளர் கூறி உள்ளார்

    இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார். இதை பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

    2019ம் ஆண்டு சிந்துவுடன் பயிற்சியாளராக இணைந்த பார்க், தொடர்ந்து சிந்துவின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது பயிற்சிக் காலத்தில் சிந்து மூன்று முறை சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

    இந்நிலையில் சமீபகாலமாக பி.வி.சிந்துவின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. அவரது மோசமான பார்மிற்கு பயிற்சியாளர் பார்க் பொறுப்பேற்றதுடன், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

    'பி.வி.சிந்து சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி உள்ளார். இதற்கு பயிற்சியாளராக நான் பொறுப்பாக உணர்கிறேன். எனவே அவர் ஒரு மாற்றத்தை விரும்பினார். மேலும் ஒரு புதிய பயிற்சியாளரை தேடுவதாகவும் கூறினார். அவளுடைய இந்த முடிவை மதிக்க முடிவு செய்தேன். அடுத்த ஒலிம்பிக் வரை அவருடன் இருக்க முடியாது என்பது வருத்தம் அளிக்கிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி' என பார்க் கூறி உள்ளார்.

    • பி.வி.சிந்து முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    பாசெல்:

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஸ்டாடில்மென்னை சந்தித்தார்.

    இதில் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) தோல்வியடைந்தார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
    • சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. தைவானின் பாங்சிக்லீ-ஜென் லீ ஜோடியை 12-21, 21-17, 28-26 என்ற கணக்கில் கடுமையாக போராடி வென்று கால் இறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிளிச்பெல்டுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டி நடந்தது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த இயோ ஜியா மின்னுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 24-22, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.

    • தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • காயம் குணமடைந்த பிறகு விளையாடிய போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார்

    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8-21, 8-21 என்ற நேர்செட்களில் பி.வி.சிந்து தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

    காயம் காரணமாக சுமார் 5 மாத காலம் ஓய்வில் இருந்த பி.வி.சிந்து, காயம் குணமடைந்த பிறகு விளையாடிய போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் கடந்த வாரம் வெளியான டாப்-10 வீராங்கனைகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.
    • 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார்.

    உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்து உள்ளது.

    இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.

    அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது.

    இந்த பட்டியலில், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்கா நாட்டில் பிறந்தவரான எய்லீன் கூ என்ற வீராங்கனை 3வது இடம் பிடித்து உள்ளார்.

    இந்நிலையில், 12வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்து கடந்த 2022ம் ஆண்டில் அவருடைய மொத்த வருவாய் ரூ.58 கோடியாக இருந்து உள்ளது.

    அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் மற்றும் களத்தில் அல்லாமல் வெளியில் இருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    ×