search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qualify"

    • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடன் சந்திப்பு.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து விளக்கினர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்குபெறுவார்கள். இந்தியா சார்பில் ஏற்கனவே 97 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும்,120 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என புதிதா பதவியேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

    மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடனான சந்திப்பின் போது, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்டின் தயார் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பில், விளையாட்டுத்துறையின் புதிய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே, விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், " நான் இன்று முதல் முறையாக ஐஓஏ அதிகாரிகளை சந்தித்தேன். அங்கு அவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து என்னிடம் விளக்கினர்.

    சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க ஏற்கனவே 97 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 115 முதல் 120 தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

    • கவினா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் தென் மாவட்ட5-வது குறு வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளமுருகு இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் சுமிசுதிர் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேமதர்ஷினி, 14 வயது பிரிவு சுரேகா, 17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    அவர்களையும், நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன்,உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரையும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், பாராட்டினர்.

    ×