search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raebareli"

    • உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் மே 13-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
    • அங்கு பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று அவர் முடிவெட்டிக் கொண்டார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த மே 13-ம் தேதி பிரசாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடிவெட்டிக் கொண்டார்.

    அப்போது தனக்கு முடிவெட்டிய அந்தக் கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த வீடியோ பதிவு கவனம் பெற்றது.

    இந்நிலையில், தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்றவற்றை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    ராகுல் காந்திக்கு முடி வெட்டி 3 மாதத்துக்குப் பிறகு இந்தப் பரிசை அவர் அனுப்பி வைத்திருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மிதுன் கூறுகையில், மூன்று மாதத்துக்கு பிறகு பரிசு அனுப்பி வைத்துள்ள ராகுல் காந்திக்கு நன்றி என தெரிவித்தார்.

    • வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
    • ஒரே தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இரண்டில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்.

    இதனால் வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? ரேபரேலி தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இன்று தேர்தல் முடிவு வெளியான நிலையில், மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த்தார். அப்போது வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ராகுல் காந்தி "நான் இரண்டு தொகுதியிலும் எம்.பி.யாக இருக்க முடியாது. ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுகொடுப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். அதேவேளையில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்த முறை அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறி அங்கு வெற்றி பெற்றுள்ளார். பாரம்பரிய தொகுதி கைவிட்டபோது கைக்கொடுத்த வயாநாடு தொகுதி எம்.பி.யாக நீடிப்பாரா? அல்லது பாரம்பரிய தொகுதிக்காக வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்பது ராகுல் கையில்தான் உள்ளது.

    • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
    • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

    அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

    எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

    இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    • பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?

    2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?

    3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

    4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?

    இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    புதுடெல்லி:

    ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் பாண்டே கூறியதாவது:-

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. இந்த வழக்கில் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கவில்லை.

    2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். அவதூறு வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதற்கும், தேர்தலில் போட்டியிடும் அனுமதிக்கும் தொடர்பு இல்லை.

    இரண்டாவதாக கடந்த 2006-ம் ஆண்டு தனது குடியுரிமை பற்றி ராகுல்காந்தி கூறும் போது, `தான் இங்கிலாந்து நாட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறினார்.

    இதற்கிடையே வேட்பு மனுக்கள் பரிசீலனை கடந்த 4-ந்தேதி முடிந்து விட்டது. அப்போது ராகுல் மனு ஏற்கப்பட்டது.

    இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தாமதமாக புகார் கொடுத்ததால் ராகுல் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தெரியவந்துள்ளது.

    • வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
    • காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

    ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.

    இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுகும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

    வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 24 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்ற முடிவை எடுக்க தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிப்போம். யாரும் பயப்படவில்லை, யாரும் விட்டு ஓடவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதி ஆகும்.

    1951-ம் ஆண்டு தேர்தல் முதல் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார்.

    இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சோனியா பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 3-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.


    எனவே ஓரிரு நாளில் ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியை எதிர்த்து வெற்றி பெற இயலுமா? என்பதிலும் ராகுலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அமேதியில் களம் இறங்க சற்று தயக்கத்துடன் இருந்து வந்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அமேதியில் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அடிக்கடி சொல்லி வந்தார்.

    ஆனால் ராபர்ட் வதேராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது மேலும் சர்ச்சையை உருவாக்கி விடும் என்று சோனியா குடும்பத்தினர் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா கவுலின் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஷீலா கவுலும் சோனியா குடும்பத்து உறவினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
    • ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார்.

    காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நாளை மாலை கூடுகிறது. அப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை மக்களவை தேர்தலில் 317 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். தற்போது உடல் நலம் காரணமாக மக்களவை தொகுதியில் சோனியாக காந்தி போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    லக்னோ:

    ரேபரேலி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    அங்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் சோனியா காந்தி 5 லட்சத்து 34 ஆயிரத்து 918 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 3 லட்சத்து 67 ஆயிரத்து 740 வாக்குகளையும் பெற்றனர்.

    ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா காந்தி இங்கு வெற்றி பெற்றுள்ளார். 
    உ.பி.யின் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என குற்றம்சாட்டினார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி  பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை தந்தார் என சொல்ல முடியுமா?  காரணம், 45 ஆண்டில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது.



    கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.

    வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை மற்றும் 15 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்து அவர் பேசுவதில்லை. தனக்கு எழுதி தருபவற்றை பிராம்டரை பார்த்து படிக்க மட்டும் செய்கிறார். எது பேச வேண்டும் என எழுதி தருவதை மட்டுமே படிக்கிறார். காலம் அதனை மாற்றும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    லக்னோ:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வந்த அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.

    பின்னர், ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார் நமது நாட்டு ராணுவ மந்திரி சொல்வதை நம்பவில்லை. விமானப்படை உயரதிகாரிகள் கூறியதை நம்பவில்லை. அவர்களை எல்லாம் பொய்யர்கள் என்று புறக்கணித்து விட்டார்கள்.

    பிறகு, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று மோடி குறிப்பிட்டார்.



    பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை. 

    சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு தாய்மாமாக்களுடன் மட்டுமே ஆயுத வியாபாரம் செய்தனர்.

    இப்போது காங்கிரசாருக்கு ஒரு புது தாய்மாமா கிடைத்திருக்கிறார். அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக கோர்ட்டில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வக்கீலை ஏற்பாடு செய்து தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்,

    இன்று பிற்பகல் ரேபரேலியில் இருந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடும் பிரதமர் மோடி, இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    ×