search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahulganthi"

    • ராகுல் காந்தி மீது பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • போராட்டத்தின்போது காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

    எம்.பி. பதவி பறிப்பு

    இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

    விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்ட னையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லையில் போராட்டம்

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் உருவப் பொம்மைக்கு தீயிட்டு கொழுத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹரிஹரன் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். அப்போது அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    25 பேர் கைது

    இதை எடுத்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன்,மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் கெங்க ராஜ்,பிவிடி. ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, ரசூல் மைதீன் நிர்வாகிகள் வெள்ள பாண்டி, சின்ன பாண்டி,குறிச்சி கிருஷ்ணன் உள்பட 25 பேரை கைது செய்தனர்.

    • 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து, டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அந்தியோதயா ரெயிலை மறித்தனர்

    இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர்.

    அப்போது 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    120 பேர் கைது

    இந்த போராட்டத்தில் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலை வர் வக்கீல் காமராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்ககுமார், உதயகுமார், கவிபாண்டியன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ள பாண்டியன், அழகை கிருஷ்ணன்,

    சிவன் பெருமாள், மாவட்ட செயலாளர் கே.எஸ். மணி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க செயலாளர் தனசிங் பாண்டியன், சிவாஜி பாலசந்தர், மண்டல தலைவர்கள் பரணி இசக்கி, அய்யப்பன், கெங்கராஜ், முகமது அனஸ் ராஜா, ராஜேந்திரன் மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்ட த்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • கேள்விகளை எழுப்புவதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டது.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தலைவர்கள் கடிதம் எழுதியதில் இருந்து அவர்களுக்கு ( தலைமைக்கு) என்னுடன் ஒரு பிரச்சினை உள்ளது. கடிதம் எழுதுவதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் 6 நாட்கள் நான் தூங்கவில்லை. நாங்கள் கட்சிக்கு ரத்தத்தை கொடுத்து உழைத்தோம்.

    தங்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் விரும்பவில்லை. பல (காங்கிரஸ்) கூட்டங்கள் நடந்தன, ஆனால் ஒரு பரிந்துரை கூட பரிசீலிக்கப்படவில்லை. அமைப்பை சரியாக அமைப்பதற்கு தலைமைக்கு நேரமில்லை.

    கட்சியில் முன்னிறுத்தப்படும் தலைவர்கள், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக கட்சியை விட்டு வெளியேறச் செய்கிறார்கள். கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டதால், அந்த அமைப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம். அதனால்தான் நாங்கள் அதில் இருந்து விலக முடிவு செய்தோம்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை, இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கு உரியது. தனிப்பட்ட முறையில் அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரை (ராகுல் காந்தியை) வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். அவருக்கு ஆர்வம் இல்லை.

    பிரதமர் மோடி ஒரு மோசமான மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான். இன்று என்னுடைய சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

    பாஜகவில் சேரமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழப்பு.
    • 97 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கள்ளச் சாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் பல பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்களும் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு கொடுக்கிறது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த இந்த பூமியில் இது கவலையளிக்கும் விஷயம் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    ×