என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "railway ministry"
- தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
- இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.
குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.
ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
"இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.
"இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
- இந்தியன் ரெயில்வே சார்பில் பிப்ரவரி 26-ம் தேதி நாடுமுழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்துகொண்டனர்.
புதுடெல்லி:
ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பங்கேற்று பல்வேறு ரெயில்வே துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்ட சாதனையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் தற்போது வழங்கியுள்ளது.
ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.
தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.
இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.
இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#PambanBridge
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்