என் மலர்
நீங்கள் தேடியது "Railway tracks"
- ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
- இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மேற்கு வஞ்சிப்பாளையம் சென்னிமலை கவுண்டர் நகருக்கு செல்லும் ரெயில்வே பாதை அைடக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போக்குவரத்து சாலையாக ரெயில்வே பாதையை பயன்படுத்தி வந்தோம். சாலையை விரிவுப்படுத்துவதற்காக தற்போது ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.
- திருப்பூர் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது.
- ரெயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ெரயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் உட்பகுதியில் ஏற்படும் நுண்ணிய, லேசான விரிசலையும் கண்டறியும் யு.எஸ்.எப்.டி., (அல்ட்ரா சானிக் பிளா ரீடெக்டர்) டிஜிட்டல் கேமரா மூலம் தண்டவாளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, சிக்கண்ணா கல்லூரி வரையிலும், இரண்டாம் கட்டமாக அணைப்பாளையம் முதல் வஞ்சிபாளையம் என இரு பிரிவுகளாக சோதனை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் விரிசல் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ெரயில்வே பொறியியல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத, வெளியே புலப்படாத விரிசல் தண்டவாளத்தில் இருப்பதை யு.எஸ்.எப்.டி., கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். ெரயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.
- ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
- அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.
தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது.
- கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது.
கோவை:
நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில் ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.
கோவை-பாலக்காடு இடையிலான ரெயில் வழித்தடத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு லைன்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு யானைகள் மீது மோதாமல் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவி வருகிறது.
இந்தநிலையில் மதுக்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் அருண் மற்றும் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்களான பழங்குடியின பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பு நிறுவியது முதல் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பாதையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு யானைகள் கடந்து சென்று வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து நாட்டிலேயே முன்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி வருகிறது என்றார்.
- ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.
உடுமலை:
கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -
ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.
ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக அரசு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் ரெயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு ரெயில்வே காவல்துறை பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. #RailTracksDeaths #RailwayPolice #Mumbai