என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Raise"
- நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.
- இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
நகராட்சிக்கு தற்போது ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ. 256.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 23 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ.25.64 கோடியாகும். மேலும், இதர வருமானங்கள் சேர்த்து மொத்தம் ஆண்டு வருமானம் ரூ.45.15 கோடி ஈட்டப்படுகிறது. நாமக்கல் நகராட்சி தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது.
எனவே, தற்போது உள்ள நகரின் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரத்தில் அமைந்துள்ள, நாமக்கல் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. சுமார் 23 கி.மீ. நீளம் கொண்டுள்ள ரிங் ரோடு முதலைப்பட்டியில் தொடங்கி மரூர்ப்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி துணைத் தலைவர் பூபதி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- தேர்வு கட்டணம் உயர்வுக்கு கண்டனம்.
- பழைய கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக மாறி உள்ளது நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
தற்போது தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டணம் உயர்த்தப்பட்டதை கைவிடக்கோரியும், ஏற்கனவே வாங்கிய பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த செமஸ்டர் தேர்வில் இளங்கலையில் தேர்வு கட்டணம் 75 ரூபாய் இருந்ததை தற்போது 120 ரூபாயும், முதுகலையில் 150 ரூபாய் இருந்த தேர்வு கட்டணம் தற்போது 200 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல் செய்முறை கட்டணமும் உயர்ந்துள்ளதால் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்