என் மலர்
நீங்கள் தேடியது "Ramar Temple"
- நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
- இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.
கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
- தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.
இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் முதல் 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. நீண்ட காலத்துக்கு எரியும் வகையிலும், சிறப்பு மெழுகு விளக்குகள் கார்பன் உமிழ்வை குறைக்கவும், கோவிலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.
மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்படும் ராமர் கோவில் வளாகம், அலங்காரத்திற்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தியை மதம் மற்றும் நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாகவும் மாற்றுவதை கோவில் அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக வருகிற 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்றார்.
- சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையவே இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி இருக்கிறார். இது நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.
ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிறார். அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், அரசியலமைப்புச் சட்டம் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நாட்டுக்கு தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது.
அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது எல்லாம் செல்லாது, இதைப் பகிரங்கமாகச் சொல்லும் துணிச்சல் அவருக்கு உண்டு. வேறு எந்த நாடாக இருந்திருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என காட்டமாக தெரிவித்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தவ் தாக்கரே நேற்று அயோத்திக்கு சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி.சவானின் நினைவு தினத்தையொட்டி நேற்று சத்தாரா மாவட்டம் காரட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார். மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேவும் உடன் இருந்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை இல்லை. ராமர் இந்தியா முழுமைக்குமான கடவுளாவார். உத்தவ் தாக்கரேவும் அவரின் ஆசிர்வாதத்தை பெற்றிருப்பார்” என்றார்.
அவசர சட்டம் இயற்றும் கோரிக்கை குறித்து பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே கூறியதாவது:-
ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதிகாரத்தில் இருந்தாலும்கூட, அரசாங்கத்தால் இதில் என்ன செய்ய முடியும்?.
அயோத்திக்கு சென்று எங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால், இருகட்சிகளும் கடுமையான கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக அர்த்தமில்லை.
ஓட்டுகள் சிதறுவதை தடுக்க வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #DevendraFadnavis
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா வலியுறுத்தின. பண மதிப்பு இழப்புக்கு எப்படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதே போன்று ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வும் இந்த சர்ச்சையில் உறுதியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதற்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்திக்கு மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளனர். இந்து அமைப்புகளின் இந்த அதிரடி பேரணியால் அயோத்தி விவகாரத்தில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மிக, மிக தீவிரமாக உள்ளார். இன்று பிற்பகல் அவர் உத்தரபிரதேசம் செல்கிறார். லட்சுமண்கியூலா பகுதியில் அவர் சாமியார்களை சந்திக்கிறார். இன்று மாலை சரயு நதி ஆரத்தி விழாவில் கலந்து கொள்கிறார்.
நாளை காலை 11 மணிக்கு அயோத்தி பக்தி மார்க்சில் விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யத் திட்டமிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.
ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துணை நிலை ராணுவ வீரர்கள், கமாண்டோ படையினரும் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. பா.ஜ.க. அரசுக்கு இது தவிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #AyodhyaRally #RamJanambhoomi #ShivSena
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார்.
அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

அதுமட்டுமின்றி அயோத்தியில் மியூசியம், கலை அரங்கம், விமான நிலையம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகும்.
உத்தரபிரதேசத்தில் ராமருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டமும் உள்ளது. சரயூ நதி கரையில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.
இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படும். 36 மீட்டர் உயர பீடத்தில் ராமர் சிலை நிறுவப்படும். இதுபற்றிய அறிவிப்பையும் 6-ந்தேதி முதல்-மந்திரி வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்புகள் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் அத்வானி நடத்திய ரத யாத்திரை போன்று இந்த யாத்திரை அமையும் என்று கூறப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அருண் குமார், சுப்ரீம் கோர்ட் வேண்டும் என்றே இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி திபக் மிஸ்ரா பதவி காலத்தின்போது, உடுப்பியில் கூடிய சாதுக்கள் மாநாட்டில் அயோத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திபக் மிஸ்ரா ஓய்வுபெற்ற பின்னர் பதவி ஏற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
மற்ற வழக்குகளில் பணி நேரம் முடிந்த பின்னரும், இரவு வேளைகளிலும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை தவிர்க்கப்படுகிறது.

அயோத்தி விவகாரத்தை இந்து -முஸ்லிம்கள் இடையிலான பிரச்சனையாக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக குற்றம்சாட்டிய கிரிராஜ் சிங், ஸ்ரீராமர் இந்துக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்தால் இந்துக்கள் பொறுமையை இழந்து வருகின்றனர். அவர்கள் பொறுமை எல்லைமீறி போகும்போது என்ன ஆகுமோ? என்ற அச்சஉணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyahearing #Ayodhyahearingdelay #newLegislativeroute
இந்தியாவில் மொகலாய ஆட்சிக்கு வித்திட்டு சுமார் 300 ஆண்டுகள் நாட்டின் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பாபரின் வாரிசு என்று தன்னை அடையாளப்படுத்திவரும் இளவரசர் யாகூப் ஹபிபுதீன் துசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்துவேன் என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டில் பாபர் மசூதி எனக்கே சொந்தம். எனவே என்னை அதன் பொறுப்பாளராக நியமிக்க சன்னி வகுப்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உத்தரபிரதேச சிறுபான்மை நலத்துறை மந்திரி சவுத்ரி லட்சுமி நாராயணனை சந்தித்து மனு அளித்து உள்ளேன். என்னை பொறுப்பாளராக நியமிக்காவிட்டால் கோர்ட்டுக்கு சென்று என்னுடைய உரிமையை நிலை நாட்டுவேன் என யாகூப் ஹபிபுதீன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். #descendantofBabur #AyodhyaRamTemple #AyodhyaTemple