என் மலர்
நீங்கள் தேடியது "Ramaswamy Temple"
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- 10-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.
சாம்பவர்வடகரை:
சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
- பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
"ஆதிகும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது.
கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.
5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும்
சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.