என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rana"
- கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
- போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புராண காலத்து கதையான இந்த படம் வருகிற 27-ந்தேதி சர்வதேச அளவில் திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் விழா மும்பையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
விழா தொடங்கியதும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். தீபிகா படுகோனே மேடையில் ஏறும்போது அவரது கையை பிடித்து உதவி செய்வதற்காக பிரபாஸ் முன் வந்தார். அதற்குள் ஓடி வந்த அமிதாப்பச்சன் நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி தீபிகா படுகோனே மேடை ஏற உதவினார்.
பிரபாஸ், அமிதாப்பச்சன் இடையே நடந்த போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
தொடர்ந்து விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது:-
நாக் அஸ்வின் கல்கி 2898 ஏ.டி. படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என யோசித்தேன். மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட நினைத்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அற்புதமான படைப்பாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார்.
- படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
படத்தில் புஜ்ஜி என ஒரு அதிநவீன கார் இடம்பெற்றுள்ளது, இதற்காக மகேந்திர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு நிஜ காரை வடிவமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மகேந்தரா சிட்டியில் வைத்துள்ளனர். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் புஜ்ஜி& பைரவா என்ற அனிமேடட் சிரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிக பொருட்செலவில் இப்படம் உருவாக்கி வருகிறது.
- இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'வேட்டையன்' படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது.
- ரஜினி இது போன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது. தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இதில் அமிதாப்பச்சன் சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி நடிகர் ராணா கூறியதாவது:-
' ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கும் என்று நினைக்கவில்லை. 'வேட்டையன்' படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது.
இப்படம் வித்தியாசமாக அமைந்துள்ள படம். ரஜினி இது போன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் கோர்ட்டு , போலீஸ் தொழில்துறை அமைப்புகளை பற்றிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் விஷயங்கள் நிறைந்த படமாக அமைந்து உள்ளது "என்றார் .
இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியது. படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. பல நட்சத்திர நடிகர் பட்டாளம் நடித்ஹ்டிருக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
- அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலம்டைந்தவர் நடிகர் ராணா.
- தனியார் விமான பயணத்தின் போது தனது ‘லக்கேஜ்’ மாயமானதாக ராணா கோபமடைந்து பதிவிட்டுள்ளார்.
நடிகர், நடிகைகள் சிலருக்கு விமான பயணத்தில் அவ்வப்போது சில அசவுகரியங்கள் ஏற்படுவதும், அதை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இதில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்து இருக்கிறார். இவர் தனியார் விமானம் ஒன்றில் பயணித்தபோது அவரது பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மாயமாகி விட்டது.
இதுகுறித்து ராணா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''விமான பயணத்தில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?" என்று கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட விமான நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களையும் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.