search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranjith"

    • கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித்.
    • கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார் ரஞ்சித்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2003ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார்.

    இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார்.

    சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். அதைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர்.

    கவுண்டம்பாளையம் படத்தின் புரோமோசனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ரஞ்சித் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் " தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.

    தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என  தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
    • உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

    உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.

    இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

    • சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
    • தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

    அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.

    தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்திலும் அசோக் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'வேட்டுவம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தற்பொழுது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து சார்பாட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். வேட்டுவம் ஒரு மாடர்ன் டே கேங்ஸ்டர் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
    • இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்று உற்சாக நடனத்தினை இசைக்கேற்றார் போலும் ,பாடலுக்கு ஏற்றார் போலும் வெளிப்படுத்தினர்.

     

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சினிமா, ஆடல் பாடல் என கவனம் செலுத்தி வரும் நிலையில் அழிந்து வரக்கூடிய இந்த பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.மேலும் இந்த மாதிரியான பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


    இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இறக்குமதி செய்யப்பட்ட சாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

    சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.


    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது, 500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள். நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. ராமரின் விளையாட்டு துவங்கி உள்ளது. இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
    • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.

    சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.

    அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.

    இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.

    விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    திருவனந்தபுரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

    இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். #ActorRanjith #TTVDinakaran
    சென்னை:

    சிந்துநதிபூ, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவர் முதலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ம.க.வில் இணைந்தார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, ‘நாட்டை மீட்டெடுத்து சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆளும் தலைமை பதவியை ஏற்றால்தான் முடியும். அவருக்கு உறுதுணையாகவே கட்சியில் சேர்ந்தேன்’ என்றார்.

    ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி கூட்டங்களிலும் பங்கேற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, கூட்டணியில் பா.ம.க இணைந்தது. இதனால் ரஞ்சித் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார்.

    தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரஞ்சித், “மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் தன்மானத்தை விட்டு கூட்டணிக்காக விலை போய்விட்டனர். அதனால்தான் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறி அ.ம.மு.க.வில் இணைந்திருக்கிறேன்.

    என்னை தொடர்ந்து நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அ.ம.மு.கவில் இணைந்து எனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்றார்.  #ActorRanjith #TTVDinakaran
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பா.ரஞ்சித் சந்திப்பின் போது தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congrees #Ranjith #RahulGandhi
    சென்னை:

    இயக்குனர் ரஞ்சித் ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

    தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ரஜினிகாந்த்தின் ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கினார்.

    மெட்ராஸ் படத்தில் வடசென்னையில் சிறு சிறு தாதாக்களின் அட்டகாசத்துடன் தலித் மக்களின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டினார். இதன் மூலம் இயக்குனர் ரஞ்சித் தலித் போராளியாக உருவெடுத்தார். மெட்ராஸ் படத்தின் கதை திருட்டு பிரச்சினையில் கூட ரஞ்சித்தை தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் காப்பாற்றினர்.

    தொடர்ந்து தலித் அரசியலை பேசிவரும் ரஞ்சித் சமீபகாலமாக தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்.

    ஒரு பட விழாவில் அவருக்கும் இயக்குனர் அமீருக்கும் மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.

    நீட் தேர்வால் அனிதா மரணம் முதல் சமீபத்திய சாதிச்சுவர் விவகாரம் வரை தலித்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ரஞ்சித் 2 நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

    யார் மூலமாக ராகுலை ரஞ்சித் சந்தித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் விவாதமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியில் இதுபற்றி விசாரித்தபோது குஜராத் சட்டபேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிதான் ராகுல் காந்தியை சந்திக்க ரஞ்சித்துக்கு நேரம் வாங்கிக் கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது ’ஜிக்னேஷ் மேவானி கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவரும் எம்.எல்.ஏ. ஆனார்.

    அவர் தேர்தலில் ஜெயித்த போதே அவருக்கு ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார். பிறகு சென்னைக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.



    ஜிக்னேஷை சந்தித்த போதே தலித் வாக்குகள் பற்றியும் தமிழ்நாட்டில் தலித் வாக்கு வங்கி எப்படி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர பயன்பட்டது என்பது பற்றியும் ரஞ்சித் அவரிடம் விவாதித்து இருக்கிறார்.

    இந்த நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி மூலமாக ராகுல் காந்தியைச் சந்தித்து தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்தது ஏன் என்பது பற்றி விளக்கி இருக்கிறார் ரஞ்சித்.

    ஏற்கனவே திருமாவளவன் எம்.பி.யாக இருந்த போது ராகுல் காந்தி அவரிடம் தமிழகத்தில் தலித் ஓட்டு வங்கி காங்கிரசை விட்டுப் போனது ஏன் என்று சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுபோல திருமாவளவனோடு பல முறை ராகுல்காந்தி ஆலோசித்து இருக்கிறார்.

    ஜிக்னேஷ் மேவானியோடும் இதுபற்றி ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகத்தில் ரஞ்சித் என்பவர் இருக்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார் மேவானி. இதையடுத்து ராகுல் காந்தி ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று மேவானியிடம் சொல்ல, அதன் பிறகே ரஞ்சித்திடம் தகவல் தெரிவித்து அவரை ராகுல் காந்தியிடம் அழைத்துச் சென்றுள்ளார் மேவானி’ என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். #Congrees #Ranjith #RahulGandhi
    ×