என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rapido"

    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    • தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.

    வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது.

    கார், ஆட்டோ சவாரிக்கும் கூட ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்டது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவருக்கு ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது. 2 சவாரிகளும் வேறு, வேறு இடத்திற்கு முன்பதிவுக்காக வந்த நிலையில் இரு சவாரிகளையும் தஷ்ரத் ஒப்புக்கொண்டுள்ளார். வேறு, வேறு போன்களில் இருந்த வேறு, வேறு செயலிகள் வழியாக 2 இடங்களுக்கு ஒரே நம்பர் உள்ள ஆட்டோவில் தஷ்ரத் ஒப்புதல் அளித்துள்ள போனின் ஸ்கிரீன்ஷாட்டை ஹர்ஷ் என்ற பயனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பீக் பெங்களூரு என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
    • நாளை வரை 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநித்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.

    • தவறு செய்த பைக் ரைடர் எந்த உதவியும் செய்யவில்லை.
    • பதிவு வைரலானதை அடுத்து பயனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியரான அமிஷா அகர்வால் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் அடிப்பட்ட கால்கள் மற்றும் சிகிச்சைக்கு பிறகான கால்கள் என புகைப்படங்களை பகிர்ந்து "இனி ஒருபோதும் ரேபிடோ பைக்கை எடுக்க வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது:- "வெள்ளிக்கிழமை இரவு ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்தேன். ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக ஓட்டினார். கடுபீசனஹள்ளி அவுட்டர் ரிங் ரோட்டில், இன்டிகேட்டர் பயன்படுத்தாமல் திடீரென சர்வீஸ் லேனுக்கு மாறினார். இதனால் பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சாலையில் வீழ்ந்தோம்.

    இதில் மோசமான விஷயம் என்னவென்றால், தவறு செய்த பைக் ரைடர் எந்த உதவியும் செய்யவில்லை. ரைடர் பயணத்தை முடித்துவிட்டு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஓடிவிட்டார். மாறாக கார் டிரைவர்தான் உதவினார்.

    இச்சம்பவம் குறித்து ரேபிடோவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டபோது, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.

    "ரேபிடோவுக்கு எதிராக என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் பைக் ஓட்டுபவர்கள் பொதுவாக மிகவும் கவனக்குறைவாக ஓட்டுகிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை விரும்புவோர் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

    அவரது இந்த பதிவு வைரலானதை அடுத்து பயனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன்.
    • யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரும் உணவு வினியோக நிறுவனங்களிலும், வாடகை பைக் ஓட்டும் நிறுவனங்களிலும் பணியாற்றி சம்பாதித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ரேபிடோவில் வாடகை பைக் ஓட்டும் இளைஞர் பற்றிய தகவல் உள்ளது. அதில் பேசும் இளைஞர், நான் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன். மாதம் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 85 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.

    ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன். சிலர் எங்கள் பணியை பார்த்து சிரிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் எந்த வேலையிலும் இவ்வளவு சம்பளம் கிடைக்காது. யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்தியாவில் கிக் பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பம் சார்ந்த களங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



    • ஒரே பயணத்திற்கு ஐபோனில் காட்டும் கட்டணத்தை விட ஆண்ட்ராய்ட் போனில் ரூ.52 அதிகமாக காட்டுவதாக புகார்.
    • ஊபரில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் பகிர்ந்துள்ளார்.

    ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஊபர் செயலியில் ஒரே பயணத்திற்கு இருந்து புக்கிங் செய்தபோது வெவ்வேறு கட்டணங்கள் காட்டுவதாக எக்ஸ் பக்கத்தில் சுதிர் என்ற பயனர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது பதிவில், "ஒரே பயணத்திற்கு எனது மகளின் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஊபர் செயலியில் கட்டணம் ரூ. 290.79 ஆகவும், என்னுடைய ஐபோனில், கட்டணம் ரூ.342.47 ஆகவும் காட்டுகிறது. அதனால் எனது மகளிடம் தான் பெரும்பாலும் ஊபர் புக் செய்ய சொல்வேன். உங்களுக்கும் இது நடக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஊபர் செயலியில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும்" ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

    இவரது குற்றச்சாட்டிற்கு ஊபர் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், "இந்த இரண்டு சவாரிகளிலும் உள்ள பல வேறுபாடுகள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில், பிக்-அப் பாயிண்ட், வாடிக்கையாளரின் இடத்திற்கு வரும் நேரம் மற்றும் டிராப்-ஆப் பாயின்ட் மாறுபடுகிறது. அதற்கேற்ப கட்டணங்கள் மாறுபடுகிறது. செல்போன்களின் அடிப்படையில் பயண விலைகளை ஊபர் மாற்றியமைப்பதில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×