search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rat fever"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின.
    • இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.

    மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது. மேலும் எலிக்காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.
    • காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.

    அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின. மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த பிரதீப்-ஜீஜா தம்பதியரின் மகன் விஷ்ணு(வயது31). கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் வாலிபர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறையின் வழி காட்டுதலின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அங்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவியது. அதிலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் என பல வகையான காய்ச்சல்கள் அதிகளவில் பரவியது. மேலும் அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.

    இந்நிலையில் பருவமழை பெய்ய தொடங்கியதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவல் கேரளாவில் மேலும் அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஜூன் மாதத்தில் எலிக்காயச்சலால் 253 பேரும், டெங்கு காய்ச்சலால் 1,912 பேரும், மஞ்சள் காமாளையால் 500 பேரும், எச் 1 என் 1 தொற்றால் 275பேரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எலி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மஞ்சள் காமாலைக்கு 5 பேரும், எச் 1 என் 1 தொற்றுக்கு 3 பேரும் இறந்துள்ளனர்.

    இந்த மாதத்தில் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 127 பேருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. அதிலும் நேற்று ஒரு நாளில் 10 ஆயிரத்து 914 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 186 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை என பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால் கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மழை தீவிரம் அடையும் போது நோய்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளவில் சில மாதங்களாகவே தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    பருவநிலை மாற்றத்தின் போது சில தொற்று நோய்கள் பரவுவது சகஜமான ஒன்று. ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஜனவரி மாதத்தில் இருந்தே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக பரவுகிறது.

    நோய் பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஏதாவது ஒரு நோய் பாதித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    தொற்றக்கூடிய காய்ச்ச லால் 78, 718 பேரும், சளி தொல்லையால் 1,567 பேரும், சின்னம்மையால் 971 பேரும், டெங்கு காய்ச்சலால் 328 பேரும், மஞ்சள் காமாலையால் 294 பேரும், மலேரியாவால் 20 பேரும், எலி காய்ச்சலால் 70 பேரும், பன்றி காய்ச்சலால் 37 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

    அது மட்டுமின்றி மேற்கு நைல் காய்ச்சலால் 9 பேரும், ஷிகெல்லா தொற்றால் 4 பேரும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரி களிலும் பல்வேறு தொற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளான ஆயிரக் கணக்கான சிகிச்சை பெறுகின்றனர்.

    இவ்வாறு தொற்று நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கு மாநிலத்தில் வழக்கத்தை விட அதிகமாக நிலவிய வெப்பம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ேபாது மழை காரணமாக தொற்று காய்ச்சலால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற தொடங்க உள்ளது.

    இது தொற்று நோய்கள் பரவலை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொற்று நோய்கள் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தண்ணீரை காய்ச்சி குடிக்கு மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கேரளாவில் பரவி வரும் தொற்று நோய்கள் உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 39 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர், ஹைபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்று பாதிப்புக்கு 16 பேர், சின்னமைக்கு 10 பேர், மலேரியாவுக்கு 3 பேர், தொற்றக்கூடிய காய்ச்சலுக்கு 3 பேர் என 91 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று நோய்களில் பல எளிதில் பரவக்கூடியது என்பதால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தமிழக சுகாதாரத்துறை கவனமாக இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • டெங்கு மற்றும் எலி காய்ச்சல் காரணமாக கேரளாவில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பலவித காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் ஏராளமானோருக்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதித்துள்ளது.

    காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

    காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மாநில சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநில சுகாதாரத்துறை புள்ளி விபரங்களின் படி மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் அங்கு எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு உள்ளது.

    கேரள மாநிலத்தில் அதிக பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்த புரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத் தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் காரணமாக கேரளாவில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. திருச்சூரில் எலி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.

    2017-ம் ஆண்டை போன்றே கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அண்டை மாநிலமான கேரளால் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது தமிழக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மாவட்ட சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்பதை சோதனை செய்ய மருத்துவ குழுவை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனை கட்டி, வால்பாறை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனு மதிக்கப்படுகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகள், தாய், சேய் நல ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அனைத்து சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர்.

    இதுதவிர ஏ.டி.எஸ். கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை மூடி வைத்து பராமரிக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது இடங்களில் மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கேரளாவுக்கு அருகே உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எல்லை பகுதிகளான களியக்காவிளை, புளியரை, கம்பம், வாழையார் உள்பட 13 இடங்களில் கண்காணிப்பு பணி நடக்கிறது. தண்ணீரை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். காய்ச்சிய நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் குளோரின் கலந்து பராமரிக்க வேண்டும்.

    யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. #RatFever
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு தற்போது எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட்டங்களில் எலி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலத்தில் இருந்து எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சுகாதாரதுறை சார்பில் முகாம் அமைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டாம்பட்டியை சேர்ந்த சதீஸ்மோகன் (வயது 29) என்பவர் காய்ச்சல் பாதிப்புடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து சதீஸ்மோகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சதீஸ்மோகன் பரிதாபமாக இறந்தார்.

    ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த காந்திமதி சிகிச்சை பலன் அளிக்காமல் எலி காய்ச்சலுக்கு பலியானார்.

    எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பாலத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 29). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி கேரள மாநிலத்துக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக் காய்ச்சல் பாதிப்புடன் அவிதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இங்கு கார்த்திக்கை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல கடந்த 2 நாட்களாக எலி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த வால்பாறையை சேர்ந்த பொன்னையா குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். மேலும் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #RatFever
    கேரளாவில் எலிக்காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    கூடலூர்:

    கனமழை கொட்டிதீர்த்த கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பலர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக 3 பாதைகளில் கேரளாவிற்கு தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    போடிமெட்டு வழியாக மூணாறு பகுதிக்கும், குமுளி மலைச்சாலை வழியாக இடுக்கி மாவட்டத்திற்கும், கம்பம்மெட்டு வழியாக கட்டப்பணை பகுதிக்கும் செல்கின்றனர். தினசரி கேரளாவிற்கு தேவையான காய்கறி, பால், உணவு பொருட்கள் ஆகியவை கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் செல்கின்றனர். தினசரி தேனி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் கேரளாவிற்கு சென்று திரும்புகின்றனர்.
    கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. #Leptospirosis #RatFever #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. 

    இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர். 

    நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Leptospirosis  #RatFever #KeralaFloodRelief 

    கேரளா மாநிலத்தில் வெள்ளம் வடிந்த பின்னர் வேகமாக பரவிய எலி காய்ச்சலுக்கு நேற்றும் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தை சூறையாடிய பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்குக்கு 600-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

    இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் என்னும் தொற்றுநோய் வேகமாக பரவ தொடங்கியது. இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது.



    எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் வரை எலி காய்ச்சலுக்கு 55 பேர் உயிரிழந்திருந்தனர்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 11 பேர் உயிரிழந்ததால் இன்றையை நிலவரப்படி பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
    கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 29 பேர் பலியாகி இருப்பதால் தமிழக எல்லையில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் யாராவது வருகிறார்களா? என சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவைக்கு வரும் நபர்களை கண்டறியவும், காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் கூறியதாவது:-

    எலி காய்ச்சல் எலிகளின் சிறுநீர் மூலமாக லெப்டோ பைரோசியஸ் என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. எலி காய்ச்சலை சாதாரண காய்ச்சல் என கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    இந்த காய்ச்சல் 7 நாள் முதல் 10 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு கை, கால் வலி, தலைவலியுடன் கண் சிவப்பாக மாறிவிடும். மேலும் அடிக்கடி வயிற்று வலியுடன் வாந்தியும் ஏற்படும். கவனிக்காமல் விட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

    எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுகாதார துறை சார்பில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் கேரளாவில் இருந்து யாராவது வருகிறார்களா? என கண்காணித்து வருகிறோம். இது வரை கோவை மாவட்டத்தில் யாருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×