என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratinam"

    • ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது.
    • குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் வடிவ நுழைவு வாயிலுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் வீரசேகர், ராஜகோபால், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி ஜூன் 4-ந்தேதி வரை 1மாதம் நடைபெற உள்ளது.

    பொருட்காட்சி மேலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.பொருட்காட்சி, ராட்டினம், Exhibition, Ratinam,

    • பூங்காவில் உள்ள ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
    • ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகரில் ஒரு கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு இந்த பூங்காவில் உள்ள ஒரு ராட்டினத்தில் பலர் சவாரி செய்தனர்.

    அப்போது அந்த ராட்டினம் திடீரென அறுந்து விழுந்தது. இதில் 14 வயதான டயர் சாம்ப்சன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனையடுத்து பூங்காவில் உள்ள அந்த ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் கேளிக்கை விடுதிக்கு இடத்தை வாடகைக்கு வழங்கிய ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.

    எனவே ஐகான் பார்க் நிறுவனம் சிறுவனின் பெற்றோருக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 600 கோடி இழப்பீடு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ×