என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Raw"
- இந்திய உளவுத் துறை முன்னாள் அதிகாரி மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது
அமெரிக்காவில் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு 'சீக்கியர்களுக்கு நீதி' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங். இவர் இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார்.
இவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை இந்தியா மறுத்து வந்த நிலையில் தற்போது இந்திய உளவு அமைப்பான ரா [RAW] அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் என்பவருக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் ரா அமைப்பால் போர் கலை மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்று எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறினார். இந்த கொலை வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. "CC-1" (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் என்று கருதப்படுகிறார். இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்க காவல்துறையான FBI விகாஸ் யாதவை தேடி வந்த நிலையில் டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் ஈடுபட்டதாக வழக்குப்பதிந்திருந்தது.
இந்த வழக்கில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ள இந்திய அரசு விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹாதீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இரு நாட்டின் தூதரக உறவும் மொத்தமாக முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக ஆதிகாரிகள் லாரன்ஸ் பிஸ்னாய் தாதா கும்பலுடன் தொடர்பு வைத்து குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டில் ரா எனப்படும் உளவு அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இதன்படி, ரவி சின்ஹா 2 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை என இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் தொடருவார் என அமைச்சரவை நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போலீஸ் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கும் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவையையும் கொல்ல டெலிபோனில் சதி திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன் என தெரிவித்தார்.
இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். எனவே அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அதிபர் சிறிசேனா மறுத்தார். பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசினார்.
ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது குறித்த விசாரணையை இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை சதி திட்டம் தீட்டியதற்கான டெலிபோன் உரையாடல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சீன நிறுவனமான குயாவேயின் தொழில் நுட்ப உதவியுடன் டெலிபோன் உரையாடலை மீண்டும் பெற முயற்சி நடைபெற்றது. அதற்காக இலங்கை போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு செய்தனர்.
மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் சதி திட்ட தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விசாரணையின் போது தாமஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.ஐ.டி. போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். #MaithripalaSirisena #RAW #assassinationplot
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தின்போது தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ’ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இந்நிலையில், இந்த தகவலை இன்று இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான ஷ்ரிலால் லக்திலகா மறுப்பு தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல் அதிபர் மைத்ரிபாலா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #MaithripalaSirisena #RAW #assassinationplot
இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மைத்திரி பால சிறிசேனா.
ஜனாதிபதி சிறிசேனா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் பங்கேற்ற மந்திரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ‘ரா’ அமைப்பு எத்தகைய வழிகளில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பதை சிறிசேனா வெளியிடவில்லை.
அதிர்ச்சியூட்டும் இந்த தகவல் பற்றி கூடுதல் தகவல்கள் அறிய பல்வேறு பத்திரிகையாளர்களும் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் சார்பில் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை.
இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான “ரா” மீது குற்றம் சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ‘ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்