search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "redressal"

    • 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
    • என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு மனு கொடுத்தார்

     திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை, திருநம்பிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.

    அவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை, வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சி, சுயஉதவிக்குழு உறுப்பினராக சேர்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக காய்கறி கடை நடத்த ஏற்பாடு செய்யக்கோரி மனுக்கள் கொடுத்தனர். என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை ஒருவர் அவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு தனக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.

    அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அதிகாரி, சமூகநலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    • கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.
    • சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்கா ணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதா வது:-

    கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமான குறை கள் இருப்பின் புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரில் அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவல கத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை திட்ட குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • குறைதீர்ப்பாளரின் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ராமமூர்த்தி (89258 11321) என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய மின்னஞ்சல் முகவரி: ramllm47@yahoo.com பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×