என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "refinery"
- விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வளர்மதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை, ராணிப்பேட்டை மாவட்ட த்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், அனா தினம் நிலம் என குறிப்பிட பட்டுள்ளதால் பயிர் காப்பீடு பெற முடியவில்லை.
சென்னசமுத்திரம் ஊராட்சி ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஊரகப் பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், மருந்தகங்களில் கால்நடை களுக்கு தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் விஷாரம் ஆகிய நகராட்சிகளின் கழிவுநீர் பாலாற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும், முகுந்தராயபுரம் ரெயில்வே சுரங்கபாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், பயிர் விளைச்சலுக்கு ஏற்ற காப்பீடு வழங்கப்படுகிறதா என வேளாண் மற்றும் வருவாய் துறை அலு வலர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்,
ஆற்காடு பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தொடக்க வேளாண்மை கட்டிடங்கள் உள்ளன விவசாயிகள் தங்களது நெல் மூட்டை களை தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடங்களில் 100 டன் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம், அனாதின நிலம் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கால்நடை மருத்துவர்கள் மருந்தகங்களில் மட்டும் சிகிச்சை அளிக்காமல் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிகிச்சை வழங்க வேண்டும், அனைத்து நகராட்சிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிலையமாக செயல்பட்டு வருகிறது
- மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் உள்ள ராணிடெக் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 92 தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற சுத்திகரிப்பு நிலையமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோல் கழிவு நீர் சுத்திகரிக்கபடும் முறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
அப்போது ராணிடெக் மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, தலைவர் ரமேஷ் பிரசாத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் சிவக்குமார், இயக்குனர்கள் சபிக் அஹமத், முபின் பாஷா, பெருமாள், அலுவலர் லோகநாதன், தாசில்தார் வெங்கடேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
- கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.
தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.
மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சூரிய ஒளி நீராவி உற்பத்தி அமைப்பு
- சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் , ராணிப்பேட்டையை சுற்றி இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்திகரித்து கழிவுநீரை நன்னீராக மாற்றி மீண்டும் தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்காக ரூ.3 கோடியே 54 லட்சம் செலவில் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்க தொழில்நுட்பத்தில் சூரிய ஒளி அமைப்பு மூலம் நீராவி உற்பத்தி செய்யும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2.3 டன் விறகு கட்டைகள் எரிப்பது நிறுத்தப்பட்டு, செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்படுவதை ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பின் இந்திய பிரதிநிதி ரெனேவான்பெர்கல் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் தேபஜித் தாஸ், ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா, செம்காட் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன், எம்சோல் நிர்வாகிகள் ஜெய்பிரகாஷ் கர்ணா, ராஜ், ராணிடெக் பொதுமேலாளர் சிவக்குமார் மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மணல், ஜல்லி மாற்றி புதுப்பிக்கும் பணி நடந்தது.
- இதனை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
சுமார் 2½ லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ராஜபாளையம்- அய்யனார்கோவில் ரோட்டில் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நகராட்சி குடிநீர் தேக்க ஏரி உள்ளது.
இந்த ஏரியை சேர்ந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் 6-வது மைல்கல் அருகில் உள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13-ஆண்டுகளுக்கு பின்னர், தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேவையான தரமான ஆற்று மணல்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு மாற்றி அமைத்து நடவடிக்கை எடுத்த அவர், நகராட்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை ராஜபாளையம் நகர மக்கள் பயன்படுத்த சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியையும் ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா, ஆற்றுநீர் விரையம் ஆகாமல் முறையாக சேமிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து 6-வது மைல்நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார்.
குஜராத்தின் வதோதரா நகருக்கு அருகே உள்ள நந்தசாரி என்ற பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் பலர் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 3 ஒப்பந்த ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் உடல் கருகி பலியானார்கள். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்