என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "refusal"
- டி.என்.ஏ.பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- வேங்கைவயல் விவகாரத்தில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்ததில் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
வேங்கைவயல் பகுதியை சோ்ந்த 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்தனர். அவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேரும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக அவர்களது கருத்தை தெரிவிக்க அறிவுறுத்தி, மறுநாள் மதியத்திற்குள் பதில் அளிக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதைத்தொடா்ந்து 8 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவரும் எழுத்து பூர்வமாக தங்களது கருத்தை வக்கீல் மலர்மன்னன் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் எதற்காக மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் நீதிபதி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, அரசு தரப்பு வக்கீல் குமார் ஆகியோர் இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை முக்கியத்துவம் குறித்தும், இவர்களிடம் மட்டுமில்லாமல் 119-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உள்ளதாகவும், இந்த பரிசோதனை மேற்கொள்வதால் இவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள் என்றனர். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீசார் முயல்வதாகவும், குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்தது யார்? என்பதை போலீசார் கண்டுபிடிக்காமல், அந்த அசுத்தம் யாருடையது என்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்துகின்றனர் எனவும், அதன்மூலம் குற்றம் சாட்ட முயல்வதாகவும், சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக அந்த 8 பேரின் தரப்பில் வக்கீல் வாதத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி தள்ளிவைத்தார். அன்றைய தினம் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் ஏற்கனவே வர மறுத்தனர். தற்போது மீண்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து 4-ந் தேதி தெரிந்துவிடும்.
- பெண்களை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.
- இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் இருந்து நூறுநாள் வேலை செய்யும் பெண்கள் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் வரை கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் அவர்கள் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்றால், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெண்களை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கூறினார்.
- காதலன் மறுப்பு தெரிவித்ததால் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த 25 வயது பெண்.
இவரும் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த லெனின் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் நாம் உடனே திருமணம் செய்து கொள்வோம் என லெனினிடம்கூறினார்.
அதற்கு அவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண் கேட்டபோது, லெனின் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர்.
- மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது.
நெல்லை:
தமிழகத்தின் 6-வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வார்டுகளில் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு உதவி கமிஷனர், பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேஸ்திரிகள் என சுமார் 100 பேர் வரை பணியில் இருக்கின்றனர்.
இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் உள்ளனர். இது தவிர சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கமிஷனர், நிர்வாகம், கணக்கு உள்ளிட்ட தனித்தனி துறைகளுக்கு உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணிகள் மேற்கொள்வதற்கு என மொத்தமாக மாநகராட்சியில் 1,500 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மண்டலத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினால் அவருக்கு சுகாதார அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும்.
ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு கடிதம் சென்று அவர் ஒப்புதல் அளித்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பதவி உயர்வு பெறும் இடத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி வகித்து வந்தால் அதாவது காலி பணியிடம் இல்லை எனில் பதவி உயர்வுக்கு தகுதியான நபருக்கு அந்த உயர் பதவிக்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் பதவி உயர்வுக்கு தகுதியான 5 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கமிஷனர் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய நிலையில், கவுன்சில் கூட்டத்தில் அந்த பதவி உயர்வு ஆணைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
அதாவது மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான பணி ஆணையை வழங்குவதற்கு கமிஷனர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது. இதேநிலைதான் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்டால், மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், பதவி உயர்வு கொண்டு வந்தால் சம்பளமும் உயர்த்தி வழங்க வேண்டும். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறி கவுன்சில் கூட்டத்தில் அந்த தீர்மானத்தை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.
அதே நேரத்தில் பதவி உயர்வு மற்றும் அதற்குரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனில் மிகப்பெரிய தொகையை அரசியல் பிரமுகர்கள் லஞ்சமாக கேட்கின்றனர் என்றும் அதிகாரிகள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.
டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா என்கிற இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக குந்தன் பதாக் (வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த குந்தன் பதாக், எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதையொட்டி வழக்கம் போல் கேட்டை அடைத்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்கும்படி குந்தன் பதாக்கிடம் கூறினர்.
அதற்கு அவர் ‘ரெயில் மிக அருகாமையில் வந்துவிட்டது, எனவே கேட்டை திறக்க முடியாது’ என அவர்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குந்தன் பதாக்கின் 2 கைகளையும் வெட்டினர். இதில் அவருடைய 2 கைகளும் துண்டாகின. மேலும் அவருடைய கழுத்து, கால் ஆகிய பகுதிகளிலும் பலமாக தாக்கிவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் குந்தன் பதாக்கை மீட்டு அருகில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வெட்டப்பட்ட அவருடைய கைகளை இணைப்பதற்காக தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #RailwayGate #Gateman #CrossingGate
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்