என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Republic Day Celebration"
- பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர்.
திண்டுக்கல்:
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 7 ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பலக்கனூத்து ஊராட்சியை சேர்நத நாச்சம்மாள், காளாஞ்சிபட்டியை சேர்ந்த கற்பகம், நெல்லை மாவட்டம் கீழகோட்டத்தை சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் மெட்டுகுளத்தை சேர்ந்த புஷ்பா, செங்கல்பட்டு மாவட்டம் புத்தூரை சேர்ந்த சத்யா, பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவனூரை சேர்ந்த சுதா, ஆலம்பாடியை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றனர்.
முழுசுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ஏகாம்பரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர். குடியரசு தினவிழாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இந்த கூட்டத்தில் திடக்கழிவு, திரவக்கழிவு, மேலாண்மை செயல்பாடு, நீடிக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.
இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.
ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.
மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.
இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.
சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.
- தலைமைச் செயலகத்தில் இன்று கேடயங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
- குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் இவ்வாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில் சிறப்பாக செயல்பட்ட இராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப்பிரிவு, தேசிய மாணவர் படைப்பிரிவு, சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கும், குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், துணைச் செயலாளர் மரு. எஸ். அனு, ஆகியோர் உடனிருந்தனர்.
- கரூர் டி.என்.பி.எல். ஆலையில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
- அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூ–ரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை–யில் நடந்த நாட்டின் 74-வது குடியரசு தின விழா–வில் சிறப்பு விருந்தினராக உற்பத்தி மற்றும் திட்டம் ஒருங்கி–ணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன் கலந்து–கொண்டு தேசிய கொடி–யேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாதுகாவலர்களின் அணிவகுப்பை உதவி மேலாளர் பாதுகாவஸ்) சங்கிலிராஜன் மற்றும் உதவி அதிகாரி (பாதுகாவஸ்) செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.
அவர்களின் அணிவகுப்பு மரியாதையை வரதராஜன் ஏற்றுக்கொண்டு சிறப்புரை–யாற்றினார். நிகழ்ச்சி முடிவில் துணை பொது மேலாளர் (பாதுகாப்பு மற்றும் பாது–காவல்) ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆலையின் உயர் அதிகாரிகள், தொழி–லாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு நகராட்சியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அதிகுர் ரஹ்மான், ஜானகி, நாகஜோதி, பாரதி, சின்னா, வழக்கறிஞர் அப்துல் ஹமீத், நஹிஹா ஜுபேர் அஹமத், தேன்மொழி, சுல்தானா, இந்திரா காந்தி, அப்துல் ஜமீல், நகராட்சி அதிகாரிகளான ராஜ் குமார், அஜய் குமார், சுரேஷ்குமார், ராஜேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
- குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து ச.பசுங்கிளி பாண்டியன் விளக்கி பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கணிதத்துறை தலைவர் ச.பசுங்கிளி பாண்டியன், குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கி பேசினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், பாலு, ரமேஷ், கதிரேசன், சேகர், கணேசன், அபுல்கலாம் ஆசாத், கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவமுருகன், கப்பற்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவஇளங்கோ, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் தேசிய படை மாணவர்கள் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம், கீழக்கரையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நகர சபை அலுவலக வளாகத்தில் உள்ள காத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் பிரவின் தங்கம், கணக்காளர் பத்மநாபன், மேலாளர் நாகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. யூனியன் தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் ராஜவேணி, ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவ- மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்தார்.
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழா உறுதிமொழியை நுண்ணு யிரியல் துறை பேராசிரியை ஷோபனா முன்மொழிய, அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.
பெரியப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அசன் அலி, முகமது களஞ்சியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
- மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார்.
- விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பூண்டி பள்ளியில் 74வது குடியரசு தினம் மற்றும் 33வது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாகபள்ளியின் முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி, மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளாக குடியரசு தினவிழா பற்றிய இந்தி மற்றும் ஆங்கில உரை, நடனம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் போன்றவை காண்போர் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பள்ளியின் 33வது ஆண்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஒலிம்பிக்மரியாதையை ஏ.வி.பி., டிரஸ்டி பிரதாப் உறுதிமொழியுடன்மாணவர்களுக்கு பல விளையாட்டுப்போட்டிகள்நடைபெற்றது.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாபின் டி சௌசா 2022-23-ம்கல்வி ஆண்டிற்கான விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவின் நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
- முன்னாள் ராணுவ சிப்பாய் அழகிரிராஜ்க்கு செயலர் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
- ஜனாதிபதி உரையை ஆசிரியர் ரஞ்சித்குமார் தமிழாக்கம் செய்து வழங்கினார்.
உடுமலை :
உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. பள்ளி செயலர் ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி தலைமை உரையாற்றினார். எஸ்.கே.பி. பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் முன்னாள் ராணுவ சிப்பாய் அழகிரிராஜ்க்கு செயலர் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
முதுகலை ஆசிரியை நளினி வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை பூரணி முன்னிலை வகித்தார். ஜனாதிபதி உரையை ஆசிரியர் ரஞ்சித்குமார் தமிழாக்கம் செய்து வழங்கினார். ஆசிரியை காளியம்மாள் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. என்.சி.சி. அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவினை ஆசிரியை கல்யாணி தொகுத்து வழங்கினார்.
- குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் உரையாற்றப்பட்டது.
- பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.பி தனபால் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் சிறப்புரையாற்றினார்.இதில் கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் அனைவரையும் கவர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் பேராசிரியருமான பாபு மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்
- கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின விழா தொடக்க நிகழ்ச்சியில் 7-வது வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-வது வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா ஆகியோர் கிராஅத் ஒதினர். 5-வது வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-வது வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-வது வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் விழாவில் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வை யாளர் களது பாராட்டை பெற்றார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி குடியரசு தின சிறப்புரையாற்றினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிமிற்கு பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.
பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
- தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது, வங்கியின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து உடமைதாரர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் வங்கி தலைமை கணக்கு அதிகாரி, பொதுமேலாளர்கள், துணை மற்றும் இணை பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்