என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rescued Alive"
- 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் பெண் உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
- தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து பெண்ணை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மனைவி ராணி (வயது 37). இவர் சோலைக்குட்டம் பகுதியில் உள்ள காளவாசலில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். உடன் வேலை பார்ப்பவர்கள் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர்.
அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் ராணி உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அந்த கிணற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் இருந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது.
உடனடியாக இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பெண்ணை மீட்டு திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காமராஜபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது.
- விலங்குகள் நல ஆா்வலா் ஆமையை உயிருடன் மீட்டாா்.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள காமராஜபுரத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது. இதன் அருகில் இருக்கும் போா்வெல் குழிக்குள் ஒரு ஆமை விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதனைப் பாா்த்த பொன்பிரபு என்பவா் வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தாா். விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜ் ஆமையை உயிருடன் மீட்டாா். பின்னா், காங்கயம் வனத் துறையினரின் அறிவுறுத்தல்படி, செம்மாண்டம்பாளையம் குட்டையில் ஆமை விடப்பட்டது. ஆமையை மீட்ட விலங்குகள் நல ஆா்வலரை பொதுமக்கள் பாராட்டினா்.
- குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
- கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடுமலை :
உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
- கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- தீயணைப்பு துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது50), விவசாயி. இவரது பசு மாடு அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து பழனிச்சாமி வேலாயுதம் பாளையம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்
- வேலியில் சிக்கிய நாய் பயத்தில் யாரையும் அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.
- தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
நெல்லை
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள சீனிவாசர் நகர் பகுதியில் காலி மனைக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் நேற்று வளர்ப்பு நாய் ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியது.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ரிச் ஹவுசிங் சேர்மன் கண்ணன் மற்றும் பேட்டை காமராஜர் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் நாயை மீட்க முயற்சி செய்தனர். நாய் பயத்தில் அவர்களை அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.
இதுகுறித்து ரிச் ஹவுசிங் கண்ணன் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மைக்கேல்ராஜ், சந்தர், ஆறுமுகம், தங்கராஜா, செல்வரத்தினம், இசக்கி ஆகியோர் கம்பி வேலியில் சிக்கிய நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
- கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
- சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணி (வயது 24). இவர் டால்பின் நோஸ் என்ற சுற்றுலா பகுதியின் அருகே உள்ள எதிரொலிக்கும் பாறையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.
அவர் நேற்று பகலில் ஒரு சுற்றுலா பயணிக்கு புகைப்படம் எடுக்கும்போது பாறையில் இருந்து சுமார் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இச்சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தால் உறைந்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சுமார் 700 அடி பள்ளத்தில் இறங்கி தேடி மணியை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கயிறு கட்டி மணியை மேலே கொண்டு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்