search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescuers"

    • மழை, வெள்ள பாதிப்பு, பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
    • பேரிடர் காலத்தில் பிறருக்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் மூலம் கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்புக்குழு கிராம அளவிலான அறிமுகக்கூட்டம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மெலட்டூர் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பேரிடர் காலத்தில் பிறருக்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், இரும்புதலை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, கோவத்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கருப்பையன் மற்றும் மெலட்டூரை சுற்றியுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்து–றையினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வருவா ய்துறை மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர் செய்திருந்தனர்.

    தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய பெங்களூரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூர் மாநிலம் மனோரஞ்சிதபாலையா பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மகள் சித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சித்ரா தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ரெயில் ஏறி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

    ரெயிலில் இருந்து இறங்கிய அவர் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சிறுமியை வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.

    ×