search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reserve Bank of India"

    • நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
    • விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.

    புதுடெல்லி:

    லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.

    செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.

    • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
    • தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.


     

    வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

    வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். 

    • மே 10 அன்று 'ரூபாய் 2000' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்வதாக ஆர்.பி.ஐ. அறிவித்தது
    • 93 சதவீத நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக செப்டம்பர் 1 அன்று ஆர்.பி.ஐ. அறிவித்தது

    பல்வேறு காரணங்களால் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் புழக்கத்தில் இருந்த '500 ரூபாய்' மற்றும் '1000 ரூபாய்' நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட 2016 நவம்பர் மாதமே, மத்திய ரிசர்வ் வங்கியால் '2000 ரூபாய்' நோட்டுக்கள் புதியதாக புழக்கத்தில் விடப்பட்டன. அந்த புதிய நோட்டுக்களை அச்சிடும் பணியும் 2018-19 காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், புழக்கத்தில் உள்ள '2000 ரூபாய்' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்ள போவதாக கடந்த மே 10 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு இறுதி நாளாக செப்டம்பர் 30 வரை காலக்கெடு வைத்திருந்தது.

    இதனையடுத்து, இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அனைவரும் வங்கிகளில் இதனை செலுத்தி ஈடாக வேறு மதிப்பில் ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ள தொடங்கினர். சுமார் 4 மாதத்திற்கும் மேலாக கால அவகாசம் இருந்ததால் வங்கிகளில் முண்டியடித்து கொள்ளாமல் மக்கள் அன்றாட வங்கி அலுவல்களிலேயே இந்த பரிமாற்றத்திற்கு ஒத்துழைத்தனர்.

    நாட்டில் இருந்த 93 சதவித '2000 ரூபாய்' நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 1 அன்று அறிவித்தது.

    இந்நிலையில், இன்றுடன் காலக்கெடு நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த காலக்கெடுவை சற்று நீட்டித்து மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, வரும் அக்டோபர் 7 வரை '2000 ரூபாய்' நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளவோ அல்லது தங்களது வங்கி கணக்கில் செலுத்தவோ அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7-க்கு பிறகும் கூட மத்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆர்.பி.ஐ. விதித்த இந்த 'ரூபாய் நோட்டு தடை'க்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல மனு, கடந்த ஜூலை 3 அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.


    - மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.

    - பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

    - ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    - செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும். 

    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம்ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

    மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    • டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
    • சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:-

    ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.

    பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.

    தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

    டிஜிட்டல் கரன்சி என்பது சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. அதை சாதாரண பணத்துக்கான மாற்றுவழியாக கருதக்கூடாது. சாதாரண பணத்துக்கான அனைத்து மதிப்பும் டிஜிட்டல் கரன்சிக்கு உள்ளது. சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    ஆனால், சாதாரண பணத்துக்கு அளிப்பதுபோல், டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி, மின்னணு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறம்பட மாற்றும். சாதாரண பணத்தை கையாள்வதில் உள்ள செலவை குறைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும்.
    • 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி :

    பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், 3-ந்தேதி நடக்கிறது. அதில், மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ. ரிசர்ச் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில், ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த ரெபோ ரேட் உயர்வால், வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது.
    • ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    மும்பை :

    நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

    தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.

    காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதுபோல், 'டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பிரிவு)' என்ற டிஜிட்டல் கரன்சி, இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தலாம்.

    ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    முன்னதாக, தமிழக அரசில் தொழில்துறை முதன்மை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #ShaktikantaDas  #RBIGovernor #RBIGovernorappointed 
    நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. #ReserveBankofIndia
    மும்பை :

    நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 1.207 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,600 கோடி) உயர்ந்து 400.489 பில்லியன் டாலராக (சுமார் ரூ.28 லட்சம் கோடி) இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது முந்தைய வாரத்தில் 399.282 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அன்னிய செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஏப்ரல் 13–ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426.028 பில்லியன் டாலராக இருந்தது. பின்னர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இது சரிவடைந்தது. இதில் தற்போது உயர்வு கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இதைப்போல கடந்த 14–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பும் 144 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1000 கோடி) அதிகரித்து 20.378 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.46 லட்சம் கோடி) இருந்ததாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #ReserveBankofIndia 
    இங்கிலாந்து இளம் பெண் ஒருவர் ரிசர்வ் வங்கி பெயரில் போலி வலைதளம் ஆரம்பித்து திருவள்ளூர் வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் வசித்து வருபவர் திலீப்குமார். கைத்தறி நெசவாளர்.

    இவருக்கு பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லிண்டா போஸ்மன் என்ற பெண் அறிமுகமானார்.

    அவர் துணிவியாபாரம் சம்பந்தமாக இந்தியா வர இருப்பதாக திலீப்குமாரிடம் தெரிவித்தார். முன்னதாக தனது உடைகளை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் அதனை பணம் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வாலிபர் ஒருவர் திலீப் குமாரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது ‘‘உங்கள் முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை பெற ரூ.48,500 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பணத்தை கட்ட ரிசர்வ் வங்கி பெயரில் இணையதள முகவரியும் கூறினார். இதனை நம்பிய திலீப்குமார் அந்த முகவரியில் பணத்தை கட்டினார்.

    இதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மீண்டும் திலீப் குமாரை தொடர்பு கொண்ட அதே வாலிபர் விமான நிலையத்தில் சோதனை செய்யத போது பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், இதற்கு அபராதமாக ரூ.98 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    மேலும் ஆர்.பி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் பெற ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் வகையில் பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த திலீப்குமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கும்பலமாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதுவரை ரூ.3 லட்சம் வரை திலீப்குமார் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் பணம் கட்டி இருக்கிறார். அனைத்தும் ஆன்-லைன் மூலமாக நடைபெற்றுள்ளது.

    போலியாக ரிசர்வ் வங்கி பெயரில் இணையதளம் ஆரம்பித்து நூதனமாக கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஏமாற்றபட்டதை உணர்ந்த திலீப் குமார் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியிருப்பதால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கை வெளியிடப்படும். கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் உயர்ந்தது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நாணயக் கொள்கைக் குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நாணய கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம், பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய பண வீக்கத்தை கருத்தில் கொண்டு, வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.


    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் அதிகரித்து 6.50 சதவீதமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    2013ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை குறிப்பிடத்தக்கது.

    வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது. #RBI #RBIMonetaryPolicy #RepoRate
    ×