என் மலர்
நீங்கள் தேடியது "retirement"
- தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
- நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று ராயுடு பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
பெங்களூரு அணியின் தோல்வியை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வெளியிட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இது மட்டுமின்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த முறை கோப்பை வென்ற சென்னை அணி வீரர்களின் வீடியோ ஒன்றையும் ராயுடு பகிர்ந்துள்ளார். அதில், சில சமயங்களில் சிலவற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- தினேஷ் கார்த்திக் இன்றளவும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி வருகிறார்.
- சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார்.
புதுடெல்லி:
தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.
இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணைநின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.
விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோயர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
It's official ?
— DK (@DineshKarthik) June 1, 2024
Thanks
DK ?? pic.twitter.com/NGVnxAJMQ3
- விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது என்றார் ஜடேஜா.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
- நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
- தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.
ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

- ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
- கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்
டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்த ஜடேஜா 45 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்தை நிறைவு செய்துள்ளார்.
அதே சமயம் ஜடேஜாவை முந்தி 49 புள்ளிகளுடன் 78 ஆவது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுத்துள்ள கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
- எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.
ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.
பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.
இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.
எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது.
பிரெஞ்சு தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த கால்பந்தாட்ட ஜாம்பவான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யூரோ 2024 பிரான்சுடனான தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று பிரெஞ்சு ஸ்ட்ரைக்கர் ஒலிவியர் ஜிரூட் ஏற்கனவே கூறியிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது. ஒலிவியர் ஜிரூட் பிரான்ஸ் வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். பிரெஞ்சு தேசிய அணியைத் தவிர, ஜிரூட் தற்போது MLS என்ற அமெரிக்க லீக்கில் விளையாடி வருகிறார்.
பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்து பிரான்ஸின் ஆல் டைம் முன்னணி கோல் அடித்த கால்பந்தாட்ட வீரராக ஜிரோட் உள்ளார்.
பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் மற்றும் லிலியன் துராம் ஆகியோருக்குப் பிறகு, ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் ஆவார்.
தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
இந்த பிரெஞ்சு அணியுடன் நான் பணியாற்றிய 13 ஆண்டுகள் என் இதயத்தில் என்றும் மறையாது, இது எனது மிகப்பெரிய பெருமை மற்றும் எனது அன்பான நினைவகம்.
என்று கூறினார்.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
- வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.
தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.
- வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன், ஆல் ரவுண்டர் வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். இதுவரை வங்கதேசம் கிரிக்கெட் அணிக்காக 129 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷகிப், அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு குறித்து பேசிய ஷகிப், "புதிய வீரர்களை கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 கிரிக்கெட்டிற்கும் இது பொருந்தும். இது குறித்து தலைமை தேர்வுக் குழு தலைவர் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அனைவருமே, இது தான் கடந்து செல்லவும், புதிய வீரர்கள் வருவதற்கும் சரியான தருணமாக இருக்கும் என்று உணர்ந்தோம்," என்று தெரிவித்தார்.
37 வயதான ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடுகிறார். இந்த போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள வங்காள தேசிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு முக்கிய காரணமாக பிராவோ பார்க்கப்பட்டார்.
- இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
- இந்த டி20 தொடரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருடன் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.