search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revenue department"

    • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
    • வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

    • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

    பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

    ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.
    • அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த சிலர் ஆட்களை வைத்து ஆலமரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.

    இதுகுறித்து தாசில்தார் மோகனன் கூறியதாவது:- ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி கோரியிருந்தனா். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி பெறாத நிலையில் ஆலமரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் கிளை சங்கம் சார்பில் முதுகுளத் தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார தலைவர் சிங்க முத்து தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாந்தி, வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் வட்ட செயலாளர் தினேஷ் பிரபு ஆகியோர் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி வட்டாட் சியர் மனோஜ் முனியன் அவர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் கள், வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தாரை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் தினகரன் முன்னி லை வகித்தார்.

    ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவுப்படி ஆக்கிரமிப்பு களை அகற்றிய கள்ளக்கு றிச்சி மாவட்ட தாசில்தாரின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெற கோரியும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வருவாய்த்துறை ஊழியர்களை தரக்குறை வாக பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்த வருவாய்துறை ஊழிய ர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    • திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன?
    • கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

    புதுச்சேரி:

    சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (சுசி) மாநிலச் செயலாளர் லெனின்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற சாதி, இருப்பிட சான்றிதழ்களை தாலுக்கா அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வருவாய்துறை ஆன்லைன் மூலம் வழங்கி வந்தது. தற்போது ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் மட்டும் வழங்கிவிட்டு இருப்பிட சான்றுகளை கைப்பட எழுதி கொடுக்கிறார்கள்.

    திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன? கணினி சர்வர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கையால் எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    சென்டாக் மூலம் விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு சில தினங்கள் இருக்கின்ற சூழலில் இருப்பிடச் சான்று சான்றிதழ் கையால் எழுதிக் கொடுப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் மோசடி செயல்கள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை அபகரித்த செயல்கள் மக்களுக்கு தெரியும. அதுபோன்ற மோசடி சான்றிதழ்கள் பெறுவதற்கான முயற்சி நடக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலே நிலவுகிறது. ஆகவே, கையால் எழுதிக் கொடுக்கும் சான்றிதழ் முறையை ரத்து செய்து ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும். கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

    இவ்வாறு லெனின்துரை அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார்.
    • புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும் மே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதனை தொடங்கி வைக்கவும் உள்ளார்கள். அதேபோல் புதிய தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்ட அறிக்கையும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மேலும் புதிய தாலுக்கா அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சில விஷமிகள் வாணாபுரம் தாலுகாவின் தலைநகர் வேறெங்கோ செல்வதாக தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். தவறான தகவல் பரப்புவோர் மீது மாவட்ட காவல்துறையின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.
    • வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    திருப்பூர் :

    வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் , உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணை களை விரைந்து வழங்கிட வேண்டும், வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லாமல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    • வருவாய்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவி யாளர் காலிப்பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாரணையை வெளியிட வேண்டும்.

    அரசு தரப்பில் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலூகா அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு குடிமைபொருள் வழங்கல்துறை, கலால் பிரிவு உள்ளிட்ட அலுவ லகங்கள் ஊழியர்கள் முழுமையாக போராட்ட த்தில் பங்கே ற்றதால் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது.

    இதேபோல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தது.

    மாவட்டம் முழுவதும் 445 வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

    வருவாய்துறையினர் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    • திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×