என் மலர்
நீங்கள் தேடியது "Revenue"
- மத்திய அரசின் 1 ரூபாயில் வருவாயில் வருமான வரி மூலம் 22 பைசா வருவாய் கிடைத்துள்ளது.
- மத்திய அரசின் 1 ரூபாயில் செலவில் மாநில வரிப்பகிர்விற்காக 22 பைசா செலவு செய்யப்படுகிறது.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு 1 ரூபாயில் கிடைக்கும் வருவாய் மற்றும் செலவு சதவிகிதம் வெளியாகியுள்ளது.
1 ரூபாயில் மத்திய அரசின் வருவாய்:
24 பைசா - கடன் வாங்குதல்
22 பைசா - வருமான வரி
18 பைசா - ஜி.எஸ்.டி மற்றும் பிற வரிகள் வருவாய்.
17 பைசா - கார்ப்பரேட் வழி
09 பைசா - வரியில்லா வருவாய்
05 பைசா - மத்திய கலால் வரி
04 பைசா - சுங்க வரி
01 பைசா - கடனில்லா மூலதன வருவாய்
1 ரூபாயில் மத்திய அரசின் செலவு:
20 பைசா - கடன் வட்டி
22 பைசா - மாநில வரிப்பகிர்வு
16 பைசா - மத்திய அரசின் திட்டங்கள்
08 பைசா - மத்திய அரசு நிதியுதவி திட்டங்கள்
08 பைசா - நிதிக்குழு மற்றும் பிற பரிமாற்றங்கள்
08 பைசா -பாதுகாப்பு
08 பைசா - பிற செலவினங்கள்
06 பைசா - மானியம்
04 பைசா - பென்ஷன்
- மதுரை ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக உயர்ந்துள்ளது.
- ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர் ஆகியவை சரக்கு ெரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.170 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.128.44 கோடியாக இருந்தது. மதுரை கோட்டத்தில் கடந்த 6 மாத சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 413 சரக்கு ெரயில்களில் ஏற்றுமதி நடந்தது. தற்போது 614 ஆக உயர்ந்துள்ளது. தென்னக ெரயில்வே நடப்பு அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1766 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதம் அதிகம் ஆகும். ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.
- பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
- பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடி கிடைத்துள்ளது.
புதுடெல்லி
நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.
பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.
பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.
- 3 நாள் தொடர் விடுமுறை மதுரை ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
- ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.
மதுரை
சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள் விடுமுறை என்பதால் ரெயிலில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர். அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பயண சீட்டு அதிகம் விற்பனையாகி உள்ளன. பொதுவாக மதுரை ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.8.5 லட்சம் என்ற அளவுக்கு முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் விற்பனை ஆகும்.
ஆனால் சுதந்திர தின விடுமுறை காரணமாக சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் முறையே ரூ. 16 லட்சத்து 50,144, ரூ.15லட்சத்து01 734, ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.
அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது.
- மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும்
மதுரை
மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது. இதில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 165 ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் சான்றிதழும், 21 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-
மதுரை கோட்ட ெரயில்களில் கடந்த ஆண்டு 14.02 மில்லியன் பேர் பயணித்தனர். இதன் மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகம்.அடுத்தபடியாக 2.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் போக்குவரத்து வருவாயாக ரூ.237.28 கோடி ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 62 சதவீதம் அதிகம்.
மதுரை கோட்டத்தில் 98 சதவீத பயணிகள் ெரயில்கள் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 247 கி.மீ. ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 922 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளன. 94 ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு, ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் குறைகளை அலைபேசி வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் உடனடியாக தீர்க்க தொலைபேசி உதவி எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.
விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனால், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

புதிய ஆர்டர்களுடன், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக புதிய எம்3 ரக இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இசிஐஎல் நிறுவன வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1275 கோடியாக இருந்தது. 2018-19 நடப்பு நிதியாண்டில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாங்குவதற்காக இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் ரூ.1800 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டின் இசிஐஎல் நிறுவனத்தின் வருவாய் ரூ.2400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் ராணுவத்திற்கான மின்னணு மின்சுற்றுகள், அணு உலைகளில் பயன்படும் ரேடியோக்கள், செயலற்ற தன்னியக்க மறுபயன்பாடு சாதனங்கள் போன்ற கருவிகளையும் தயாரித்து வருகிறது. 2017-18 ஆண்டுக்கான அறிக்கையில், அணு சக்தியுடனான இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்போது, நடப்பு நிதியாண்டில் ரூ.1800 கோடிக்கு வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரி கூறுகையில், ‘ 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பிற்கு மொத்தமாக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டின் வருவாய் ரூ.2600 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் தயாரித்து வழங்கும்போது நிறுவனத்தின் வருவாய் மேலும் உயரும்’ என கூறினார்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா தேர்தல்களில் இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. #EVMrecordrevenue
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜை தொடங்கும். ஜனவரி மாதம் மகரவிளக்கு திருவிழா நடைபெறும். இந்த இரண்டு விழாக்களிலும் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களால் கேரள அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். உண்டியல் வருவாய், அப்பம்-அரவணை விற்பனை, போக்குவரத்து கழகம் ஆகியவை மூலம் இந்த வருமானம் கிடைக்கும்.
இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்திற்கு வருவாய் குறைவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு சபரிமலை வருவாய் ரூ.263 கோடியே 78 லட்சமாக இருந்தது.
இந்த ஆண்டு இது ரூ.168 கோடியே 12 லட்சமாக குறைந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.95 கோடியே 66 லட்சம் குறைவாகும்.
கோவிலின் வருவாய் குறைந்தாலும் இம்முறை கேரள அரசின் போக்குவரத்துக்கழகம் கணிசமான லாபத்தை ஈட்டி உள்ளது. இம்முறை போராட்டம் மற்றும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் நிலக்கலில் இருந்து பம்பைக்கு அரசு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பஸ்கள் மூலமே பம்பை சென்று சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர்.
இதற்காக கேரள அரசு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தினமும் 99 குளிர் சாதன வசதி இல்லாத பஸ்களையும், 44 குளிர் சாதன வசதி கொண்ட பஸ்களையும் இயக்கியது. இது தவிர 10 மின்சார கார்களும் பயணிகளை ஏற்றிச் சென்றது.
இதன் மூலம் சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.45 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதுபற்றி கேரள அரசின் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் டோமின் தச்சங்கிரி கூறியதாவது:-
கேரள அரசு போக்குவரத்துக்கழகம் நிலக்கல்-பம்பை இடையே நடத்திய போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.31 கோடியே 2 லட்சம் வருவாய் ஈட்டியது. மற்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்கியதன் மூலம் ரூ.14 கோடி வருவாய் கிடைத்தது.
கடந்த ஆண்டுகளில் சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.15.2 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு இது 3 மடங்காக உயர்ந்து ரூ.45 கோடியே 2 லட்சம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #KSRTC

மத்திய அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி ஆன்லைன் வாயிலாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் இ-விசா திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 வெளிநாடுகள் இணைக்கப்பட்டன. 2015 ஆகஸ்டு மாதத்தில் 113 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
2016 மார்ச் மாதத்தில் இந்த வசதி மேலும் 37 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதனால் மொத்தம் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இ-விசா வசதி கிடைத்தது. பின்னர் இத்திட்டத்தில் ஜப்பான் உள்பட மேலும் சில நாடுகள் இணைக்கப்பட்டன. இதனையடுத்து மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-விசா வசதி பெற்று வருகின்றனர். இந்த வசதியின் கீழ் வரும் வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் 2 மாதங்கள் வரை தங்க முடியும்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இ-விசா வசதியின் கீழ் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 4,45,300-ஆக இருந்தது. 2016-ஆம் ஆண்டில் அது இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து 10,79,696-ஆக அதிகரித்தது. 2017-ல் 19 லட்சமாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இ-விசா திட்டம் அறிமுகமான காலம் முதல் இதுவரை இந்த வசதியைப் பயன்படுத்தி நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவினம் குறைவாக உள்ளது. இதனால் மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும், வணிக பிரிவினருக்கும் இ-விசா வசதி வழங்கப்படுகிறது.