search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river sand"

    • இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
    • 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடிச் சென்று தங்கள் வீடு உள்ள பகுதிகளில் கொட்டுவைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலமாக மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். வீடுகள் முன்பாக ஆற்று மணல் குவியல் குவியலாக இருந்தது.

    இந்த மணலை 2 வாகனங்களில் ஏற்றும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வந்தனர். மினி லாரி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முயன்ற போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார், புதுவை மாநிலம் கொம்பாக்கம் வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28).
    • ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28). இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மூட்டையில் ஆற்று மணல் இருந்ததை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்று மணலை திருடிய குற்றத்திற்காக செல்வத்தை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் டிராக்டரில் பிளிக்கல் பாளையம் காவிரி ஆற்றில் நள்ளிரவு மணல் அள்ளிக் கொண்டு அய்யம்பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.

    அப்போது கரட்டூர் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜேடர் பாளையம் போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த மணலை அரசு அனுமதி இல்லாமல் அள்ளி, திருட்டு தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.

    அவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நள்ளிரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திருட்டு தனமாக வாகனங்களில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.

    ×