search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roaming"

    • சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் அவ்வப்போது சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து நகர்ப்புற உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூரை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி மட்டுமே முழுக்க முழுக்க நகரமாக உள்ளது. மாறாக, பூண்டி நகராட்சி, பல்லடம், வெள்ளகோவில் உள்ளிட்ட நகராட்சிகள், அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமப்புறங்களை ஒட்டியுள்ளன.

    பேரூராட்சிகளின் வழியாக தான் அருகேயுள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அதிகம் என்ற நிலையில் அவர்கள் அங்குள்ள மேய்ச்சல் நிலம், சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த சமயத்தில் சில கால்நடைகள், நகராட்சி, பேரூராட்சிக்கு சாலைக்கு வந்துவிடும்.

    நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் பட்டி அமைத்து அதில் அடைத்து வைக்கலாம். அதன் உரிமையாளர்கள் வந்து கேட்கும் போது அபராதம் விதிக்கலாம். கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

    மாநகராட்சியில் மட்டுமே அதற்கான கட்டமைப்பு, கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை.எனவே சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தாலும், ஆள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளினால் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகாா் அளித்தனா்.
    • கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

    வெள்ளக்கோவில்

    வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரனிடம் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

    பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:- வெள்ளக்கோவில் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய கூடாது. உப்புப்பாளையம் மேற்கு, மு. பழனிசாமி நகா், காமராஜபுரம், சீரங்கராய க்கவுண்டன்வலசு, இந்திரா நகா், கச்சேரிவலசு, அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மாடுகள், வெள்ளாடுகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன.

    கால்நடைகளால் பெரும் விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இனி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா். 

    • குட்டி யானை கிளைகளை சாலையில் இழுத்து போட்டு சேட்டையில் ஈடுபடுகிறது.
    • யானை உலா வருவதால் கவனமாக செல்ல வாகன ஓட்டிகளை வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மஞ்சூர்

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாக உள்ளது. இதனால் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன.

    இதையொட்டி மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக கெத்தை மலைப்பாதையில் 6 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது சாலையில் முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து குட்டியுடன் தாய் யானை சுற்றித்திரிகிறது. வழக்கமாக குட்டியுடன் உலா வரும் காட்டுயானைகள் வாகனங்களின் அருகில் வந்தால் தாக்க முயற்சி செய்யும்.

    ஆனால் இந்த யானைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக உலா வருகின்றன. சில நேரங்களில் குட்டி யானை கிளைகளை சாலையில் இழுத்து போட்டு சேட்டையில் ஈடுபடுகிறது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடனும், அதே சமயம் யானைகளுக்கு இடையூறு செய்யாமலும் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

    • தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது.
    • இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்தில் 10 வன சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை தின்று வரு கிறது.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தைகளும் வெளியே வந்து செல்கிறது. இதே போல் கரடிகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை செல்போன்களில் படம் பிடித்தும் செல்கிறார்கள். அப்போது ஒரு சில நேரங்க ளில் வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலி யுறுத்தி உள்ளனர்.

    ×