search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rob"

    • பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் சகிரா என்பவர் நேற்று மாலை, வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திரு ந்த ரூ.91 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் கடைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்த சி.சி.டி.வி. காமிராக்க ளையும் கொள்ளையர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ள னர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையில் கொள்ளையடித்தனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் நாராயணன் (வயது 27) இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் கார்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் நேற்று மதியம் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.அதே போல் இவரது கடைக்கு அருகில் ஏழுமலை என்பவரின் கண்ணாடி கடையில் இருந்த 85 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அமானி கொண்டலாம்பட்டி எஸ். நாட்டமங்கலம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவரும் இவரது மனைவியும் அந்த பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 5 கிராம் தங்க கம்மல்கள், பணம் ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுப்பிரமணி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் பூட்டை உடைத்து கொள்ளையடித்தனர்.
    • சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் தியாக பரமம் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 54).

    இவர் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தை ராசிபுரம் பகுதிக்கு மாறுதல் செய்வதற்காக கடந்த 6 மாத காலமாக பூட்டி வைத்திருந்தார். நேற்று காலை சென்றபோது நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மின்மோட்டார் உட்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×