என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "robbed"
- புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நகைக்கடை பிஎன்ஜி ஜுவல்லர்ஸ்.
- கலிபோர்னியா நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது.
வாஷிங்டன்:
மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பி.என்.ஜி. ஜூவல்லர்ஸ். இதன் அமெரிக்க கிளை கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது.
கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் உள்ள நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பல்வேறு நகைகளை சில நிமிடங்களில் கொள்ளை அடித்துச் சென்றது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு வெளியாகவில்லை.
விசாரணையில், கொள்ளையர்கள் கடையை தொடர்ந்து நோட்டமிட்டதும், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is law & order failure!!
— Nabila Jamal (@nabilajamal_) June 15, 2024
Planned attack on Indian jewellery store PNG in San Francisco
20 masked men in 'smash & grab' robbery looted entire store before fleeing. Only 5 arrested
pic.twitter.com/TdJFV5T9zp
- கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
- போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொழில்போட்டி காரணமாக வியாபாரியை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43). இவர் மினி வாகனம் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தண்ணீர் நிறுவனத்திற்கும் இடையே தொழிற் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜெயராமன் தண்ணீர் வண்டியுடன் லைனுக்கு சென்றார். கேதையறும்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து எங்கள் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயராமனை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனையடுத்து காயமடைந்த ஜெயராமனை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் வாலிபரை மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்க ரையை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ராஜேஸ், சவுந்தர் ஆகியோர் குடிபோதையில் அவரை வழிமறித்து பணம் கேட்டனர்.
அதற்கு மாரி முத்து பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் இதுகுறித்து யாரிட மும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாரி முத்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா குற்றவாளியை காட்டி கொடுத்தது
- வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்
கோவை,
கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 34). இவர் குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் காசாளரான ஆனந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இவர் நிறுவனத்தில் வரவு, செலவுகளை பார்த்து வீட்டு மீதி இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கபோர்டில் வைத்து விட்டு சென்றார்.
நள்ளிரவு நிறுவனத்தில் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் யாரோ கபோர்டில் இருந்த பணத்தை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் நிறுவனத்தை திறக்க வந்த எலக்ட்ரிசீயன், ஷட்டர் உடைக்கப்பட்டு கபோர்டில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து நிறுவன மேலாளர் மோகன பிரியாவிற்கு தகவல் தெரிவித்தார்.அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதே நிறுவனத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு சேர்ந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை தேடி வருகின்றனர்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது.
- பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு,
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி(வயது56).
இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த வேலை காரணமாக கோவை பீளமேடு வந்தார். பிளமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ரமணி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.
அப்போது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருந்தது.கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டியை சேர்ந்தவர் சாம்(19). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை காந்திபுரத்தில் தங்கி ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அதனை தான் தங்கியிருக்கும் லாட்ஜ் அருகே நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போய் விட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முன்கதவு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பு உடைய பொருட்களை அள்ளி சென்றனர்
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 44). இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பு உடைய 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். அடுத்த நாள் காலை சம்பத் கடைக்கு வந்தார். அப்போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பதும், கடைக்குள் இருந்த மேற்கண்ட பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பத் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார்.
- இது குறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது50).
இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகள் வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அவர் காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்துள்ளார்.
- மராத்தாள் மகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர்.
மறுநாள் செயின் மாயமானது கண்டு மராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்