என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rohini"
- ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்."
- அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி, கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை ரோகினி 'நஸீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
Introducing @Rohinimolleti as NAZEEMA in VETTAIYAN ?️ A pivotal role awaits, promising depth and intrigue. ?#Vettaiyan ?️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/1ySx10RzhQ
— Lyca Productions (@LycaProductions) September 28, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
- ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரை உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பாலியல் புகாரால் மலையாள நடிகர், நடிகைகளின் அமைப்பான 'அம்மா' அமைப்பு நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
மலையாள திரை உலகத்தை போன்று தமிழ் திரை உலகத்திலும் பாலியல் சம்பவங்கள் நடந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில நடிகைகள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமனம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் சம்பவங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த குழுவில் தாராளமாக புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பதற்கான தனி மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
புகார்கள் விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 5 ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் புகார் பற்றி வெளியில் பேசாமல் குழுவில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி விசாரணை குழுவின் தலைவரான ரோகிணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியலால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- லல்லு, மகளின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
குடும்ப அரசியலுக்கு பெயர் போனது பீகார் முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவின் குடும்பம். அவரது குடும்ப உறுப் பினர்கள் 6 பேரும் அரசியலில் களம் கண்டிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதால் ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.
அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் லல்லுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, நிதீஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
சமீபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தனது கூட்டணியை மாற்றி பா.ஜ.க.வுடன் இணைந்ததால் மந்திரிகளாக இருந்த லல்லுவின் மகன்கள் தற்போது எம்.எல்.ஏ.க்களாக மட்டும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் லல்லுவின் மற்றொரு மகள் ரோகிணி ஆச்சார்யாவை ராஷ்டீரிய ஜனதா தளம் களம் இறக்கியுள்ளது, அவர் லல்லுவின் 4-வது அரசியல் வாரிசாகும். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி ஆகியோர் அரசியலில் உள்ளனர். மிசா பாரதி மேல்- சபை எம்.பி.யாவார்.
44 வயது டாக்டரான ரோகினி ஆச்சார்யா லல்லுவின் 2-வது மகள் ஆவார். அவர் சரன் தொகுதியில் போட்டியிடு கிறார். இந்த தொகுதி முன்பு சாப்ரா தொகுதியாக இருந்தது.
இந்த இடம் லல்லுவின் குடும்ப தொகுதியாகும். லல்லு பிரசாத் யாதவ் இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். கடைசியாக 2009 தேர்தலில் அவர் சரன்தொகுதியில் 51,815 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஆனால் கடந்த இரண்டு தேர்தலிலும் ராஷ்டீரிய ஜனதா தளம் அந்த தொகுதியில் தோல்வியை தழுவியது. 2014 தேர்தலில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி 40,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
கடந்த முறை (2019) லல்லுவின் சம்மந்தி சந்திரிகா ராய் (தேஜ் பிரதாப் யாதவின் மாமனார்) 1.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த 2 முறையும் முன்னாள் மத்திய மந்திரி யும், பா.ஜனதா மூத்த தலைவருமான ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார்.
பா.ஜனதாவை இந்த தடவையாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற வேட்கையில் லல்லு தனது மகள் ரோகினையை களத்தில் இறக்கி உள்ளார். இந்த மகள் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு.
லல்லு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது அவரை கவனித்து கொண்டவர் ரோகினி. மேலும் தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து பாசத்தை காட்டி மக்கள் இடையே பெரும் பாராட்டை பெற்றார்.
தனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மகளை தேர்தலில் வெற்றிபெற வைத்து அதை பரிசாக வழங்க லல்லு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். மகளின் வெற்றிக் காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். உடல் நல பிரச்சினைகள் இருந்த போதிலும் லல்லு பல பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
அதோடு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகளையும் அடிக்கடி சந்தித்து தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுள்ளார். லல்லு அந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருந்ததால் மகளை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
ஆனால் பா.ஜனதா வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான ராஜீவ் பிரதாப் ரூடியை தோற்கடிப்பது சவாலான தாகும்.
62 வயதான ரூடி மறைந்த வாஜ்பாய், பிரதமர்மோடி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். 1996-ம் ஆண்டில் இருந்தே அவர் அந்த தொகுதிக்கு அறிமுகமானவர்.
1996, 1999, 2014 2019 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது சரன்தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளார்.
அனுபவம் வாய்ந்த ரூடியுடன் போட்டியிடுவது குறித்து ரோகினி கூறும்போது, 'நான் தொகுதிக்கு புதிது அல்ல. பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அறிவேன். எனது அரசியல் குருவான தந்தையிடம் இருந்து நான் அரசியலின் நுணுக்கங் களைக் கற்றுக்கொண்டேன்" என்றார்.
ரூடி கூறும் போது. "போட்டியில் ரோகினி இல்லை. திரைக்குப் பின்னால் இருந்து போராடும் லல்லுதான் உண்மையான எதிரி" என்றார்.
ரோகினி பாரம்பரிய முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கிகளை நம்பி இருக்கிறார். தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் கடினமான பணி அவருக்கு உள்ளது. ஆனால் சரன் தொகுதி அரசியல் களம் இப்போது லல்லு ஆட்சிக் காலத்தைப் போல் இல்லை.
சரன்தொகுதியில் வருகிற 20-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.
சமூகத்தில் பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இயக்குனர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ரோகிணி இயக்கும் இந்த படத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.
77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.
பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.
- பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன்.
- ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.
பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன். பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் நடிகை ரோகினையை கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர், 2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில் இன்று நடிகர் ரகுவரனின் நினைவு தினத்தையொட்டி அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவரை நினைவு கூர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்