என் மலர்
நீங்கள் தேடியது "Rooster"
- சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான்.
தெலுங்கானா மாநிலம் மகபூப நகர் மாவட்டத்தில் உள்ள பூரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சேவல் ஒன்றை கையில் பிடித்து சென்றான். அந்த சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான். அதே நேரம் அந்த சேவல் யாருடையது என தெரியாததால் போலீசார் அதை பாதுகாப்பதற்காக முடிவு செய்து சேவலை போலீஸ் நிலைய சிறையிலேயே அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த செய்தி அப்பகுதியில் பரவ தொடங்கியதும் மக்கள் பலரும் போலீஸ் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை பார்த்து வருகிறார்கள்.
- தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
- நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் பொங்கல்(சங்கராந்தி) பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன.
அவற்றுக்கு தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதிக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் அனைவரும் ரங்காபுரம் என்னும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும் ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து பந்தய சேவல்களை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இதைப் பார்த்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என்னிடம் வந்து ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்கு கேட்டனர்.
அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர் என்றார்.
- போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் கும்பலாக ஆட்கள் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
- பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
- அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார்.
ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
அந்த சேவலுக்கு ஜிமிக்கி போட்டு சிங்காரித்திருந்தார். இறக்கைகளை வண்ணம் தீட்டி அலங்கரித்து பூ சூட்டி கொண்டு வந்திருந்தார். அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார். இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி வேண்டுதலை நிறைவேற்றினேன் என அவர் தெரிவித்தார்.
- கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.
- சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது. அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது.
பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
- தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
- அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.
ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.
மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.