என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rope"
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடக்கம்
- நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடிமரத்தில் கட்டுவற்காக புனித தர்ப்பை புல், பாய், கயிறு ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர (சாலகட்லா) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது, தங்கக் கொடிமரத்துக்கு பயன்படுத்தப்படும் புனித தர்ப்பை புல், பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலைக்கு வந்தன. திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து துணை வனத்துறை அதிகாரி சீனிவாசுலு, அந்தத் துறை பணியாளர்கள் புனித தர்ப்ப புல், பாய், கயிறு ஆகியவற்றை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து, கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது புனித தர்ப்பை புல், தர்ப்பை பாய், கயிறு ஆகியவை வைக்கப்பட்டன. நாளை நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்தப் புனித பொருட்கள் பயன்படுத்தப்படும்.
பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கருட கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 'துவஜாரோஹணம்' என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலின் தங்கக் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ருத்விக்குகள் கொடிமரத்தை சுற்றி வேத மந்திரங்களுடன் தர்ப்ப பாயை போர்த்துவர். கொடிமரம் வரை தர்ப்பை கயிறு கட்டப்படும். தர்ப்பை கயிறு, பாய் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்கள் இரவும் பகலுமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் புனித பொருட்களை தயாரித்துள்ளனர். தர்ப்பையில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகைகள் உள்ளன. அதில் ஏழுமலையான் கோவிலில் 'விஷ்ணு தர்ப்பை' பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷ்ணு தர்ப்பை புல் திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் வளர்க்கப்படுகிறது. அதை, தேவஸ்தான வனத்துறையினர் அறுவடை செய்து, திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தி காய வைத்து, நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு தயார் செய்தார்கள். வனத்துறை ஊழியர்கள் 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தயாரித்த தர்ப்பை பாய் மற்றும் 200 அடிக்கு மேல் நீளமுள்ள கயிறு திருமலைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பை புல், கயிறு, பாய் ஊர்வலத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் அதிரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,
- போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அன்பழகன் கூலி தொழிலாளி இவருடைய மனைவி ஜமுனா வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அதிரதன் (வயது 12).
அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் அதிரதன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது துணி காய வைப்பதற்காக பயன்படுத்தபடும் கயிற்றில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரதா விதமாக அவனது கழுத்தில் கயிறு மாட்டிகொண்டது அப்போது சுதாரித்துக் கொண்டு நிற்க முயன்ற போது கால் வழுக்கியதில் அதிரதன் கழுத்தில் கயிறு பலமாக இறுக்கியது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மயக்க நிலையில் இருந்த அதிரதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் அதிரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர், அவனது உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எம்.கே.மூப்பனார் சாலை அருகே புது ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை யில் இன்று மதியம் பொதுமக்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர்கள் பிணத்தை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகே புதுஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்தவ ருக்கு 40 வயது இருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இறந்தாரா?
தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் ?
என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன் (வயது22). தொழிலாளி. திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடையவராம்.
இந்நிலையில் நேற்று குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் திடீரென வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திகேயனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர் களின் ஆலோசனைப்படி அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று இரவு கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்நிலையில் அதிகாலை உறவினர்களுக்கு தெரியாமல் கார்த்தி கேயன் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவர் அங்கிருந்து தப்பி முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் எங்கே வெளியில் சென்று மீண்டும் தற்கொலைக்கு முயல்வாரோ? என்ற அச்சத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயனை கயிற்றால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது உறவினர்கள் அங்கில்லாத நேரத்தில் கயிற்றை விடுவித்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால் எதிர் பாராதவிதமாக ஏற்கனவே தூக்குமாட்டிய போது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் கயிறு சிக்கிக் கொண்டு கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறிய கார்த்திகேயன் பரிதாபமாக இறந்துள்ளார்.
பின்னர் கார்த்திகேயனின் உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவக்கல்லூரி வளாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக அதே கயிற்றால் கழுத்து இறுகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்