என் மலர்
நீங்கள் தேடியது "Ropecar"
- பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
- முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழனி:
பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.
தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.
இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன.
- 10 மணி நேர போராட்டத் துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
ஈக்வடார்:
ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப் கார்கள் செல்கின்றன. இந்த நிலையில் ரோப் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கி கொண்டனர்.
மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன. கோளாறை சரி செய்து ரோப் கார்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கயிறுகள் மூலம் ரோப் கார்களில் தவித்தவர்கள் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குயிட்டோ நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
- தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.
- கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் பொதுவான கால்நடை மருந்துகளை வினியோகிக்கும் வகையில் ரூ.3,880 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் பொது கால்நடை மருத்துவத்தை வழங்குவதற்கும், பசு ஆஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கான ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் ரூ.75 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
மேலும் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் பொது நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கிலோமீட்டர் தொலைவு 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,730.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இதுபோல் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.4 ஆயிரத்து 81 கோடி செலவில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. இந்த கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
இவ்வாறு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.